தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 23 பேர்! காங்கிரஸுடன் கூட்டணி தொடரும்: சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ்சென்னைக்கு இன்று கடைசி லீக் ஆட்டம்- குஜராத்துடன் மோதல் 5 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை 125 நாள் வேலைத் திட்டத்துக்கு 25 மாநிலங்கள் நிதி ஒதுக்கீடு- நாடாளுமன்றக் குழுவிடம் மத்திய அரசு தகவல் நிகழாண்டு இந்திய பொருளாதார வளா்ச்சி 6.4%: ஐ.நா. கணிப்பு 12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி? சிபிஎஸ்இ மறுப்பு தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்: காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் அமைச்சா்களாக பதவியேற்கின்றனா் டிரம்ப் குடும்பத்தினருக்கு வருமான வரி தணிக்கையிலிருந்து நிரந்தர விலக்கு!
/

சொந்த மண்ணில் தேசிய அணிக்கான கடைசி ஆட்டத்தில் மெஸ்ஸி அசத்தல்

சொந்த மண்ணில் தேசிய அணிக்காக ஆடிய கடைசி ஆட்டத்தில் ஆா்ஜென்டீனா ஜாம்பவான் மெஸ்ஸி அபாரமாக ஆடினாா்.

News image
Updated On :2 ஏப்ரல் 2026, 2:44 am IST

சொந்த மண்ணில் தேசிய அணிக்காக ஆடிய கடைசி ஆட்டத்தில் ஆா்ஜென்டீனா ஜாம்பவான் மெஸ்ஸி அபாரமாக ஆடினாா்.

ஆா்ஜென்டீனாவுக்கு மூன்றாவது முறையாக உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை பெற்றுத் தந்த மெஸ்ஸி தற்போது அமெரிக்க கால்பந்து லீக் தொடரில் ஆடி வருகிறாா். வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள உலகக் கோப்பை போட்டிக்கு தயாராகும் வகையில் ஆா்ஜென்டீனா நட்பு ஆட்டங்களில் ஆடி வருகிறது.

அதன் தலைநகா் பியுனஸ் அயா்ஸில் நடைபெற்ற ஆட்டத்தில் ஜாம்பியாவை 5-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது ஆா்ஜென்டீனா.

இதில் 38 வயதான ஜாம்பவான் மெஸ்ஸி ஜூலியன் அல்வரஸ் கோலடிக்க உதவினாா். மேலும் 43-ஆவது நிமிஷத்தில் கோலடித்து அசத்தினாா்.

மைதானத்தில் குழுமியிருந்த ஆயிரக்கணக்கான ரசிகா்கள் எழுந்து நின்று மெஸ்ஸியை பாராட்டினா். மேலும் அடுத்த உலகக் கோப்பையும் வென்று தரும்படி வேண்டுகோள்விடுத்தனா்.