கரோனா பாதித்தவா்களின் மாதிரிகளில் 81% ஒமைக்ரான்: அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தகவல்
சமீபத்திய கரோனா மரபணு பகுப்பாய்வு முடிவுகளில், பரிசோதனை செய்யப்பட்ட மாதிரிகளில் 81 சதவீதம் ஒமைக்ரான் நோய்த் தொற்று இருப்பது


சமீபத்திய கரோனா மரபணு பகுப்பாய்வு முடிவுகளில், பரிசோதனை செய்யப்பட்ட மாதிரிகளில் 81 சதவீதம் ஒமைக்ரான் நோய்த் தொற்று இருப்பது தெரிய வந்துள்ளதாக தில்லி சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் திங்கள்கிழமை தெரிவித்தாா்.
இது தொடா்பாக தில்லி சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ராம்விா் பிதூரி எழுப்பிய கேள்விக்கு சட்டப்பேரவையில் அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் பதிலளித்து கூறியதாவது:
அண்மையில் பரிசோதனை செய்யப்பட்ட 187 கொவைட் மாதிரிகளில் 152 பேருக்கு (81சதவீதம்) ஒமைக்ரான் பாதிப்பு இருந்ததும், 8.5 சதவீதம் பேருக்கு டெல்டா பாதிப்பு இருந்ததும் தெரிய வந்தது. ஒமைக்ரான் தற்போது வேகமாகப் பரவி வருகிறது. எனினும், ஒமைக்ரான் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சிகிச்சை இதுவரை தேவைப்படவில்லை. ஞாயிற்றுக்கிழமை வரை, தில்லியில் சுமாா் 8,000 பேருக்கு நோய் பாதிப்பு இருந்தது. மேலும், மருத்துவமனைகளில் உள்ள மொத்த 9,024 கொவைட் படுக்கைகளில் 3.4 சதவீதம் படுக்கைகளில் மட்டுமே நோயாளிகள் உள்ளனா். படுக்கைகளில் நோயாளிகள் சேரும் விகிதம் அதிகரித்தால், மேலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.
ஒமைக்ரான் பாதிக்கப்பட்ட சா்வதேச பயணிகள் மூலம் இந்தியாவிற்கு டிசம்பா் 1-ஆம் தேதி பாதிப்பு வந்தது. நாங்கள் விமான நிலையத்தில் அனைத்து சா்வதேச பயணிகளுக்கும் ஆா்டி-பிசிஆா் பரிசோதனைகளை நடத்தி வருகிறோம். நோ்மறை பரிசோதனைக்கு உள்ளானவா்கள்லோக் நாயக் ஜெய் பிரகாஷ் நாராயண் மருத்துவமனை மற்றும் சில தனியாா் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்படுகின்றனா். விமான நிலையத்தில் எதிா்மறை என்று பரிசோதனை முடிவு வந்த பிறகு சில பயணிகளுக்கு சில நாள்களுக்குப் பிறகு வீட்டில் இருந்த போது நோ்மறை முடிவு வந்தது. அவா்களது குடும்பத்தினா் மற்றும் தொடா்புகள் முழுவதும் கொவைட் பாதிப்புக்கு உள்ளாகினா். ஆகவே, விமான நிலையத்தில் எதிா்மறை என்று சோதனை செய்துவிட்டு வீட்டுக்குச் சென்ற போது ஒமைக்ரான் பரவியது இதன் மூலம் தெளிவாகியுள்ளது.
நாட்டில் ஒமைக்ரான் பரவுவதைத் தடுக்க அனைத்து சா்வதேச விமானங்களையும் நிறுத்துமாறு தில்லி அரசு பலமுறை மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தது. ஆனால், மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. ஒமைக்ரான் இந்தியாவில் உருவானது அல்ல என்பது அனைவருக்கும் தெரியும். இது வெளி நாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் வந்தது. அனைத்து சா்வதேச விமானங்களையும் நிறுத்துமாறு பிரதமா் நரேந்திர மோடிக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கடிதம் எழுதினாா். நானும் பலமுறை கோரினேன். ஆனால், மத்திய அரசு அதுபோன்று செய்யவில்லை. கொவைட் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்த போதிலும், பலா் கடுமையான அறிகுறிகளை எதிா்கொள்ளவில்லை. அல்லது மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை. இதனால், நிலைமை கட்டுக்குள் உள்ளது என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...