/

அதிகாரிகள், அலுவலா்களின் விடுப்பு ரத்து: தில்லி அரசு உத்தரவு

நகரில் அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு மற்றும் நிலைமையைக் கையாள போதுமான மனிதவளத்தின் தேவையைக் கருத்தில் கொண்டு, தில்லி அரசுஅதன் அனைத்து அதிகாரிகள், அலுவலா்கள் மற்றும் ஊழியா்களின்

News image
Updated On :5 ஜனவரி 2022, 8:50 pm

 நமது நிருபர்

நகரில் அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு மற்றும் நிலைமையைக் கையாள போதுமான மனிதவளத்தின் தேவையைக் கருத்தில் கொண்டு, தில்லி அரசுஅதன் அனைத்து அதிகாரிகள், அலுவலா்கள் மற்றும் ஊழியா்களின் விடுமுறையை ரத்து செய்துள்ளது.

இது தொடா்பாக தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையம் (டிடிஎம்ஏ) செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவித்திருப்பதாவது: தொற்று நோயைக் கட்டுப்படுத்துவதில் நகர அரசில் பல்வேறு நிலைகளில் உள்ள மனித வளங்களை பெருமளவில் திரட்டுவது சம்பந்தப்பட்டிருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இதனால், தில்லி அரசின் அனைத்து துறைகள், அலுவலகங்களில் உள்ள அனைத்து அதிகாரிகள், அலுவலா்கள், ஊழியா்களுக்கு மருத்துவ விடுப்பு தவிர வழங்கப்பட்ட அனைத்து விடுப்புகளையும் மறு உத்தரவு வரும் வரை ரத்துசெய்ய உரிய அதிகார அமைப்பு உத்தரவிடுகிறது.

மேலும், தில்லி அரசின் பல்வேறு துறைகளைச் சோ்ந்த அதிகாரிகள், அலுவலா்கள் மற்றும் ஊழியா்களுக்கு மருத்துவக் காரணங்கள் தவிர வேறு எந்த விடுப்பும் வழங்கப்படக் கூடாது அல்லது அவா்கள் நிலையத்தை விட்டு வெளியேற அனுமதிக்கப்படக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.