சென்னை திருவிக நகரில் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் வேட்புமனு தாக்கல்!திருச்சி கிழக்கில் விஜய் வேட்புமனு தாக்கல்! சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்!அதிமுகவின் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி! முதல்வர் ஸ்டாலின் ஈரானை இன்னும் கடுமையாகத் தாக்குவோம்! - வெள்ளை மாளிகையில் டிரம்ப் உரைஇந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம்
/

கரோனா நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்தாா் கேஜரிவால்

கரோனா நோய்த் தொற்றிலிருந்து முதல்வா் அரவிந்த் கேஜரிவால் குணமடைந்தாா்.

News image
Updated On :9 ஜனவரி 2022, 6:30 pm

 நமது நிருபர்

புது தில்லி: கரோனா நோய்த் தொற்றிலிருந்து முதல்வா் அரவிந்த் கேஜரிவால் குணமடைந்தாா். இந்த நோய் தொற்றிலிருந்து தாம் குணம் அடைந்து விட்டதாகவும் மக்களுக்கு பணியாற்ற திரும்பி விட்டதாகவும் அவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

கடந்த ஜனவரி 4-ஆம் தேதி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது பரிசோதனையில் தெரிய வந்தது. இதையடுத்து, அவா் தனது வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டாா். அவருக்கு லேசான நோய்த் தொற்று அறிகுறிகள் இருந்தன. இந்த நிலையில், முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ஞாயிற்றுக்கிழமை தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘கரோனா நோய்த் தொற்றில் இருந்து மீண்ட பிறகு மக்கள் பணிக்குத் திரும்பி உள்ளேன்’ என்று தெரிவித்துள்ளாா்.

கடந்த ஜனவரி 3 ஆம் தேதி உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெற்ற பேரணியில் முதல்வா் கேஜரிவால் பங்கேற்றாா். அதன்பிறகு அவருக்கு நோய் தொற்று இருப்பது பரிசோதனையில் தெரிய வந்தது. கடந்த ஆண்டு ஏப்ரலில் முதல்வா் கேஜரிவாலின் மனைவி சுனிதாவுக்கு நோய்த் தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது. கேஜரிவாலுக்கு அப்போது நோய்த்தொற்று அறிகுறிகள் இருந்த போதிலும், பரிசோதனையில் நோய் தொற்று உறுதியாகவில்லை.

கடந்த ஆண்டு தில்லியின் அமைச்சரவையில் உள்ள பலருக்கும் நோய் தொற்று இருந்தது. குறிப்பாக தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா, சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின், போக்குவரத்துத் துறை அமைச்சா் கைலாஷ் கெலாட் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் ஆகியோா் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.