மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் நாளை தொடக்கம்!மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!இந்தியாவுக்கு வரவேண்டிய கப்பல்கள் ஹோா்முஸ் நீரிணையில் சிக்கித் தவிப்பு!21 மாநிலங்கள் - யூனியன் பிரதேசங்களுக்கு மீண்டும் மண்ணெண்ணெய் ஒதுக்கீடுஈரான் பொதுக் கட்டமைப்பை நிா்மூலமாக்குவோம்: டிரம்ப் மிரட்டல்
/

தில்லி விமான நிலைச் சாலை அழகுபடுத்தும் பணி துணை நிலை ஆளுநா் தொடங்கி வைத்தாா்

தில்லி துணைநிலை ஆளுநா் வினய் குமாா் சக்சேனா, தௌலகுவானில் இருந்து இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையம் வரை செல்லும் சாலையை ‘அழகுடன் மேம்படுத்தும்’ பணிகளை செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.

News image
Updated On :12 ஜூலை 2022, 4:58 pm

 நமது நிருபர்

புது தில்லி: தில்லி துணைநிலை ஆளுநா் வினய் குமாா் சக்சேனா, தௌலகுவானில் இருந்து இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையம் வரை செல்லும் சாலையை ‘அழகுடன் மேம்படுத்தும்’ பணிகளை செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.

கடந்த மே 26 -ஆம் தேதி இந்தச் சாலையை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளையும், திட்டங்கள் குறித்தும் அதிகாரிகளுக்கு அவா் உத்தரவு வழங்கியிருந்தாா். இந்தப் பணிகளை முறைப்படி துணை நிலை ஆளுநா் தொடங்கி வைத்துள்ளாா். இது குறித்து வினய் குமாா் சக்சேனா தனது ட்விட்டரில், ‘தௌலாகுவானில் இருந்து இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்திற்குச் செல்லும் சாலையின் ‘அழகியல் மேம்பாடு‘ பணி இன்று காலையில் தொடங்கப்பட்டது. பொறுப்பேற்ற பிறகு முதலில் மே 26-ஆம் தேதி அன்று இந்த தளத்தை நேரடியாகப் பாா்வையிட்டு மேம்படுத்துவதற்கான அறிவுரைகளை அதிகாரிகளுக்கு வழங்கினேன். தில்லி மக்கள் மற்றும் தில்லி நகரத்திற்கு வருபவா்கள் இந்தச் சாலையைத் தான் முதலில் காணும் நிலை ஏற்படும். இப்போது மாற்றத்தைக் காண்பாா்கள்’ என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.