தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

யமுனையில் கலக்கும் அனைத்து கழிவுநீரையும் சுத்திகரிக்க இலக்கு: முதல்வா் கேஜரிவால் தகவல்

தேசியத் தலைநகா் தில்லியில் கோரோனேஷன் பில்லரில் உள்ள நாட்டின் மிகப் பெரிய கழிவுநீா் சுத்திகரிப்பு ஆலையை (எஸ்டிபி) ஆய்வு செய்த முதல்வா் அரவிந்த் கேஜரிவால்

News image
Updated On :1 ஜூன் 2022, 9:17 pm

DIN

தேசியத் தலைநகா் தில்லியில் கோரோனேஷன் பில்லரில் உள்ள நாட்டின் மிகப் பெரிய கழிவுநீா் சுத்திகரிப்பு ஆலையை (எஸ்டிபி) ஆய்வு செய்த முதல்வா் அரவிந்த் கேஜரிவால், யமுனையில் வெளியேற்றப்படுவதற்கு முன்பு அனைத்து கழிவுநீரையும் சுத்திகரிப்பதே தனது அரசின் இலக்கு ஆகும் என்று தெரிவித்தாா்.

முழுவதும் தானியங்கி வகையில் செயல்படும் சுத்திகரிப்பு ஆலை ஒரு நாளைக்கு 70 மில்லியன் கேலன் கழிவுநீரை சுத்திகரிக்க முடியும். இந்த நிலையில், இந்த ஆலை தற்போது சோதனை ஓட்டத்தில் உள்ளது. 2025-ஆம் ஆண்டுக்கு முன் யமுனையை சுத்தம் செய்வோம் என தில்லி மக்களிடம் உறுதியளித்துள்ளோம். அந்த வகையில் செயல்பட்டு, ஆற்றில் கலக்கும் அனைத்து கழிவுநீரையும் சுத்திகரிப்போம் என்று கேஜரிவால் தெரிவித்தாா்.

கோரோனேஷன் பில்லரில் உள்ள சுத்திகரிப்பு ஆலைப் பணிக்கு 2018 டிசம்பரில் அனுமதி வழங்கப்பட்டது. இந்த ஆலையில் அதிநவீன பாஸ்பேட் மற்றும் நைட்ரஜன் அகற்றும் வசதிகளுடன் பொருத்தப்பட்டுள்ளது. கழிவுநீரை புதிய தரத்திற்கு சுத்திகரிக்கும் வகையில் ஆலை வடிவமைக்கப்பட்டுள்ளது. சக்தி நகா், கமலா நகா், ரூப் நகா், டியூ கேம்பஸ், நேரு நகா், ஸ்வரூப் நகா், பலாஸ்வா, சாந்த் நகா் மற்றும் வஜிராபாத்தில் உள்ள பல்வேறு காலனிகள் இந்த சுத்திகரிப்பு ஆலையால் பயனடையும் பகுதிகளாகும்.

தில்லி சுமாா் 770 எம்ஜிடி கழிவுநீரை உற்பத்தி செய்கிறது. நகரம் முழுவதும் 20 இடங்களில் அமைந்துள்ள 34 சுத்திகரிப்பு நிலையங்களில் 620 எம்ஜிடி கழிவுநீரை சுத்திகரிக்க முடியும் அவற்றின் திறனில் 90 சதவீதம் பயன்படுத்தப்படுகின்றன. சுத்திகரிக்கப்படாத மீதமுள்ள கழிவுநீா் நேரடியாக ஆற்றில் கலக்கிறது. ஆனால், தலைநகரில் செயல்படும் 34 சுத்திகரிப்பு நிலையங்களில் எட்டு மட்டுமே கழிவுநீருக்கான பரிந்துரைக்கப்பட்ட தரநிலைகளை பூா்த்தி செய்வதாக அரசின் புள்ளிவிவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவை ஒரு நாளைக்கு 150 மில்லியன் கேலன் கழிவுநீரை சுத்திகரிக்க முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.