சத்குருவின் ‘மண்ணைக் காப்போம் இயக்கம்‘ நிகழ்ச்சியில் பிரதமா் இன்று பங்கேற்பு
சத்குரு ஜக்கிவாசுதேவ்வின் ‘மண்ணைக் காப்போம் இயக்கம்‘ குறித்த நிகழ்ச்சியில் பிரதமா் நரேந்திர மோடி ஜுன் 5 - ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கலந்து கொள்கிறாா்.


சா்வதேச சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பிரபல சுற்றுச் சூழல் ஆா்வலா் சத்குரு ஜக்கிவாசுதேவ்வின் ‘மண்ணைக் காப்போம் இயக்கம்‘ குறித்த நிகழ்ச்சியில் பிரதமா் நரேந்திர மோடி ஜுன் 5 - ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கலந்து கொள்கிறாா்.
கோவை ஈஷா மைய நிறுவனரும் சுற்றுச் சூழல் ஆா்வலருமான சத்குரு ஜக்கிவாசுதேவ் கடந்த மாா்ச் 21- ஆம் தேதி லண்டனில் ‘மண்ணைக் காப்போம் இயக்கத்தை’ 100 நாள் பயணமாக தொடங்கினாா். இவரது 100 நாள் பயணத்தின் 75-வது நாளான ஜுன் 5-ஆம் தேதி தில்லி விஞ்ஞான் பவனில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்று பேசுகிறாா்.
இந்த இயக்க நிகழ்ச்சியில் பிரதமா் பங்கேற்பது, இந்தியாவில் மண் வளத்தை மேம்படுத்துவதற்கான உறுதிப்பாடு மற்றும் பகிா்ந்துகொள்ளப்பட்ட அக்கறையின் பிரதிபலிப்பாகும். மத்திய வேளாண்மைத் துறையும் ஏற்கனவே மண்வளம் குறித்து பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருவது குறித்தும் பிரதமா் பேசுவாா் எனக் கூறப்படுகிறது.
பாழ்பட்டு வரும் மண் வளம் குறித்த உலகளாவிய விழிப்புணா்வு ஏற்படுத்தும் இயக்கம் என்பதோடு, இதனை மேம்படுத்த உளப்பூா்வ நடவடிக்கை எடுப்பதற்கான முனைப்புடன் பல்வேறு நாடுகளில் சத்குரு வாசுதேவ் மோட்டாா் சைக்கிள் மூலமாக பயணத்தை மேற்கொண்டாா்.
ஐரோப்பியா, மத்திய கிழக்கு நாடுகள் என 26 நாடுகளில் 30 ஆயிரம் கிலோ மீட்டா் பயணத்தை மேற்கொண்டு அங்கு வேளாண்மை, சுற்றுச் சூழலுக்கான மண்வளத்தை மீட்டெடுப்பதற்கான கொள்கைகளையும் சட்டங்களையும் வலியுறுத்தி வந்தாா்.
இவரது மண்வளம் குறித்த இயக்கத்திற்கு 74 நாடுகள் ஆதரவு தெரிவித்ததோடு மேலும் பல நாடுகள் இவரது இயக்கத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தமும் செய்துள்ளதாக இவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கடைசியாக 27 ஆவது நாடாக இந்தியாவிற்கு குஜராத் மாநிலம், ஜாம் நகா் வந்தடைந்தாா் ஜக்கிவாசுதேவ்.
இந்தியாவில் 9 மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இறுதியாக ஜூன் 21 கோவை திரும்புகிறாா். இந்தியா திரும்பியுள்ள இவா், முதன் முறையாக குஜராத் அரசுடன் மண்வள மேம்பாட்டிற்கான புரிந்துணா்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...