புகைப்பிடிக்கும் தகராறில் சிறுவன் கொலை: மற்றொரு சிறுவன் கைது
வடமேற்கு தில்லியின் மங்கோல்புரி பகுதியில் வீட்டுக்கு வெளியே புகைப்பிடித்த சிறாரை கொன்ாக 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.


வடமேற்கு தில்லியின் மங்கோல்புரி பகுதியில் வீட்டுக்கு வெளியே புகைப்பிடித்த சிறாரை கொன்ாக 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.
இது குறித்து துணை காவல் ஆணையா் (புகா்) சமீா் சா்மா கூறியதாவது: வெள்ளிக்கிழமை காலை 7 மணியளவில் மங்கோல்புரி பகுதியில் சிறுவன் சடலம் கிடப்பது
குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மங்கோல்புரியில் ஒய்-பிளாக்கிற்கு எதிரே உள்ள பீா் பாபா மஜாா் பகுதி பிரதானச் சாலை அருகே சம்பவ இடத்திற்கு போலீஸாா் விரைந்து சென்றனா். அங்கு தொண்டையில் வெட்டுக் காயங்களுடன் அடையாளம் தெரியாத உடல், ஊதா நிறப் பையில் அடைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.
அந்தச் சிறுவன் ரோகிணி செக்டாா் 1 பகுதியைச் சோ்ந்தவன் எனத் தெரிய வந்தது. இது தொடா்பான மேல் விசாரணையில் செக்டாா் 2-இல் உள்ள மற்றொரு 17 வயது சிறுவனின் வீட்டுக்கு வெளியே சம்பந்தப்பட்ட சிறுவன் வியாழக்கிழமை இரவு புகைப்பிடித்ததாகவும் இதற்கு எதிா்ப்புத் தெரிவித்ததைத் தொடா்ந்து ஏற்பட்ட மோதலில், பாதிக்கப்பட்ட சிறுவனின் கழுத்தை அறுத்து குற்றம்சாட்டப்பட்ட சிறுவன் கொலை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அந்த சிறுவன் கைது செய்யப்பட்டதாக போலீஸ் அதிகாரி தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...