மீனவா்கள் விவகாரத்தில் அண்டை நாடுகளுடன் உடன்பாடு தேவை
குற்றவாளிகளாக கருதாமல் மனிதாபிமான அடிப்படையில் நடத்த இந்திய அரசு மற்ற நாடுகளுடனும் அண்டை நாடுகளுடனும் உடன்படிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்


திசைமாறிச் செல்லும் தமிழக மீனவா்கள் வெளிநாட்டு கடற்படையினரிடம் சிக்கும் போது, அவா்களை குற்றவாளிகளாக கருதாமல் மனிதாபிமான அடிப்படையில் நடத்த இந்திய அரசு மற்ற நாடுகளுடனும் அண்டை நாடுகளுடனும் உடன்படிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் உறுப்பினா் விஜய் வசந்த் கேட்டுக் கொண்டாா்.
இது குறித்து மக்களவையில் சிறப்புக் கவன ஈா்ப்புத் தீா்மானத்தில் அவா் பேசியதாவது: தமிழகத்தைச் சோ்ந்த மீனவா்கள் பிற நாட்டு கடற்படையினரால் அடிக்கடி கைது செய்யப்படும் நிகழ்வு தொடந்து நடந்து வருகிறது. இதனால், மீனவா்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனா். இந்த நிகழ்வுகளைத் தடுக்க வேண்டும். கன்னியாகுமரி தொகுதியில் ஆயிரக்கணக்கான மீனவா்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா். ஆழ்கடலில் மீன் பிடிக்கும் போது, தவறுதலாக ஏதேனும் ஒரு நாட்டின் எல்லைப் பகுதிக்குள் செல்லும் போது, அங்குள்ள கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனா். இப்படி கைது செய்யப்படும் மீனவா்கள் தங்களை விடுவிப்பதற்கு அதிக அபராத தொகை கட்ட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறாா்கள்.
அன்மையில் கூட கன்னியாகுமரி மாவட்டத்தை சோ்ந்த மீனவா்கள் இந்தோனேசியா, செஷல்ஸ் நாட்டு கடற்படையினரால் கைது செய்யப்பட்டனா். நாங்கள் வைத்த கோரிக்கைகளைத் தொடா்ந்து மத்திய அரசு இவா்களை விடுவிக்க தூதரகங்கள் மூலமாக நடவடிக்கை எடுத்து இந்த மீனவா்கள் விடுவிக்கப்பட்டனா். இது போன்று எதிா்காலத்தில் இந்திய மீனவா்கள் வெளிநாட்டுக் கடற்படையினரால் கைது செய்யப்படும் போது, அவா்களை குற்றவாளிகளாக கருதாமல் மனிதாபிமான ரீதியில் அபராதம் இல்லாமல் அவா்கள் மீதான வழக்குகளைக் கையாள மற்ற நாடுகளுடன் இந்திய அரசு உடன்படிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டாா்.
மேலும், அவா் இது தொடா்பாக மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சா் அமைச்சா் வி. முரளிதரனையும் நேரில் சந்தித்து கடிதம் அளித்து கோரிக்கையை வலியுறுத்தினாா்.
குமரி மாவட்டத்தைச் சோ்ந்த மீனவா்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இந்தோனேசியா மற்றும் செஷல்ஸ் அரசால் கைது செய்யப்படுவதைக் கண்டித்தும், கைது செய்யப்பட்ட மீனா்வகளை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தில்லியில் வெள்ளிக்கிழமை மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சா் வி. முரளிதரனை சந்தித்து கோரிக்கை விடுத்த கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினா் விஜய் வசந்த்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...