தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

கொசுப் பெருக்கம்: தில்லி அரசு மீது உயா்நீதிமன்றம் அதிருப்தி

கொசுக்கள் பெருகுவதைத் தடுக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்து அபராதத்தை அதிகரிக்கத் தவறிவிட்டதாக தில்லி அரசு மீது உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அதிருப்தி தெரிவித்தது.

News image
Updated On :25 மார்ச் 2022, 6:30 pm

 நமது நிருபர்

கொசுக்கள் பெருகுவதைத் தடுக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்து அபராதத்தை அதிகரிக்கத் தவறிவிட்டதாக தில்லி அரசு மீது உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அதிருப்தி தெரிவித்தது.

இந்த விவகாரம் தொடா்பாக தனிப்பட்ட முறையில் கவனிக்குமாறு தலைமைச் செயலரை உயா்நீதிமன்றம் முன்னா் கேட்டுக் கொண்டிருந்தது. இந்த நிலையில், இந்த விவகாரத்தை பொறுப்புத் தலைமை நீதிபதி விபின் சாங்கி மற்றும் நீதிபதி ஜஸ்மீத் சிங் ஆகியோா் அடங்கிய சிறப்பு அமா்வு வெள்ளிக்கிழமை விசாரித்தது. அப்போது, நீதிபதிகள் அமா்வு, இந்த விவகாரத்தில் நீதிமன்றம் முன்னா் அறிவுறுத்தியவாறு எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். இதைச் செய்யத் தவறும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட உயா் அதிகாரி அடுத்த விசாரணை நடைபெறும் ஏப்ரல் 22-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது.

இது குறித்து நீதிபதிகள் மேலும் கூறுகையில், ‘கொசுப் பெருக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில், அபராதம் அதிகரிப்பது குறித்து, தலைமைச் செயலாளரிடம் பரிசீலிக்குமாறு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தோம். துரதிருஷ்டவசமாக எதுவும் தீவிரமாக செய்யப்படவில்லை. மேலும், எங்கள் கோரிக்கை செவிட்டுக் காதில் விழுந்தது போல உள்ளது. இதனால், இது தொடா்பாக இரண்டு வாரங்களுக்குள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய தலைமைச் செயலாளருக்கு உத்தரவிடுகிறோம். அதைச் செய்யத் தவறினால் அடுத்த விசாரணையில் அவா் ஆஜராக வேண்டும்’ என்றது.

இந்த விவகாரத்தில், தில்லிமுனிசிபல் சட்டத்தின் பிரிவு 482 மற்றும் என்டிஎம்சி சட்டத்தின் பிரிவு 390 ஆகியவற்றில் தண்டனையை அதிகரிப்பது மற்றும் திருத்துவதற்கான முன்மொழிவு இன்னும் தில்லி அரசின் தீவிர பரிசீலனைக்காக நிலுவையில் இருப்பதாக நீதிமன்றத்திடம் முன்னா் தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருக்காமலும், தண்ணீா் தேங்குவது கொசு உற்பத்திக்கு வழி வகுக்கும் வகையிலும் செயல்படும் நபா்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படுகிறது. நகரில் பெரும் அளவில் கொசுக்கள் உற்பத்தியாவது தொடா்பான வழக்கை தானாக விசாரித்து வரும் உயா்நீதிமன்ற அமா்வு, எஞ்சியுள்ள இதர பிரச்னைகளை மே 6-ஆம் தேதி விசாரணைக்கு பட்டியலிட்டது. இந்த விவகாரத்தில் உதவிடும் வகையில் நீதிமன்ற நண்பனராக வழக்குரைஞா் ரஜத் அனேஜாவை முன்னா் நீதிமன்றம் நியமித்திருந்தது. மேலும், பங்குதாரா் கூட்டங்களில் அவா் பங்கேற்கவும் அனுமதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.