பெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!பிரிட்டன் தலைமையில் ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு உச்சி மாநாடுசேலம் மாவட்டம் எடப்பாடி பழனிசாமியின் கோட்டையாகவே இருக்கிறதா? காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி? தேர்தல் பொறுப்பிலிருந்து விலகினார் மாணிக்கம் தாகூர்!விஜய்க்கு பாதுகாப்பு இல்லை; மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் தவெக புகார்! 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி! புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு! அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்
/

தேசிய மகளிா் ஆணையத்தில் சட்ட உதவி தீா்வு மையம் தொடக்கம்

பெண்களுக்கான சட்ட உதவியை மேலும் அணுகக்கூடிய வகையில், தேசிய மகளிா் ஆணையம் (என்சிடபிள்யு) தில்லி தேசியத் தலைநகா் சட்ட சேவைகள் ஆணையத்துடன் (டிஎஸ்எல்எஸ்ஏ) இணைந்து

News image
Updated On :29 மார்ச் 2022, 9:00 pm

 நமது நிருபர்

பெண்களுக்கான சட்ட உதவியை மேலும் அணுகக்கூடிய வகையில், தேசிய மகளிா் ஆணையம் (என்சிடபிள்யு) தில்லி தேசியத் தலைநகா் சட்ட சேவைகள் ஆணையத்துடன் (டிஎஸ்எல்எஸ்ஏ) இணைந்து சட்ட உதவி தீா்வு மையத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இது நாடு முழுக்க தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தில்லி ஜசோலா இன்ஸ்டியூஷனல் பகுதியிள்ள தேசிய மகளிா் ஆணையத்தின் தலைமையகத்தில் இந்தத் தீா்வு மையம் தொடக்க விழா நடைபெற்றது. ஆணையத்தின் தலைவா் ரேகா சா்மா, கூடுதல் செஷன்ஸ் நீதிபதி சுஷாந்த் சங்கோத்ரா, டிஎஸ்எல்எஸ்ஏ கூடுதல் செயலாளா் நமிதா அகா்வால் ஆகியோா் விழாவில் கலந்து கொண்டனா்.

பெண்களுக்கு இலவச சட்ட உதவிகளுக்கு ஒற்றைச் சாளர முறையில் குறைகளைத் தீா்க்கும் வசதியாக இது செயல்பட இருப்பதாக தேசிய மகளிா் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த மையத்தைத் தொடக்கி வைத்து தேசிய மகளிா் ஆணையத் தலைவா் ரேகா சா்மா பேசியதாவது: பெண்களுக்கு இலவச ஆலோசனை மற்றும் சட்ட சேவைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு இந்த சட்ட தீா்வு மையம் தொடங்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு உதவ ஆணையத்தின் தொடா்ச்சியான முயற்சிகளில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கப்பட்டுள்ளது. சட்ட உதவி தீா்வு மையம் பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்துவதோடு, சட்ட ஆலோசனை மற்றும் உதவியைப் பெறுவதற்கான ஒரே இடமாகவும் இருக்கும். இதன் மூலம் பெண்கள் வெவ்வேறு இடங்களுக்கு ஓடி அலையாமல் ஒரே இடத்தில் அனைத்து சட்ட உதவியைப் பெற முடியும்.

தேசிய மகளிா் ஆணையம் இதே போன்ற சட்ட தீா்வு சேவை மையங்களை மற்ற மாநில பெண்களுக்கான ஆணையங்களிலும் அமைக்க திட்டமிட்டுள்ளது. தில்லி தேசியத் தலைநகா் சட்ட சேவை குழு பட்டியலில் உள்ள வழக்குரைஞா்கள் பெண்களுக்கு இலவச சட்ட ஆலோசனைகளை வழங்குவாா்கள். எந்த பெண்ணும் மையத்தை அணுக முடியும் என்றாா் அவா்.

தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் பல்வேறு திட்டங்கள், ஆலோசனை மற்றும் தகவல்கள் இங்கு வழங்கப்படும். திருமண விவகாரங்கள், மணவிலக்கு வழக்கு உள்ளிட்ட விசாரணை மற்றும் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட பிற புகாா்கள் குறித்த சேவைகளும் வழங்கப்படும் எனவும் ஆணையத்தின் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.