3 ஆண்டுகளாக நடைபெற்ற கால்பந்து உலகக் கோப்பைக்கான தகுதிப் போட்டிகள்: 48 அணிகள், 12 குழுக்களாகப் பிரிப்பு!

2026 கால்பந்து உலகக் கோப்பைக்குத் தேர்வான 48 அணிகள் குறித்து...

The 48 Teams Selected for the 2026 Football World Cup.

2026 கால்பந்து உலகக் கோப்பைக்குத் தேர்வான 48 அணிகள். - படம்: ஃபிஃபா உலகக் கோப்பை.

Published On :17 ஜூன் 2026, 3:39 pm IST

கால்பந்து உலகக் கோப்பை 2026 போட்டிகளில் விளையாட 48 அணிகள் தேர்வாகியுள்ளன. கடந்த 2023 செப்டம்பர் 7ல் தொடங்கிய இந்தத் தேர்வுகள் இரண்டறை ஆண்டுகளுக்குப் பிறகு இன்றுடன் (ஏப்.1, 2026) முடிவடைந்துள்ளன.

முதல் அணியாக ஜப்பான் அணியும் 48ஆவது அணியாக இராக் அணியும் தேர்வாகின. இந்த 48 அணிகளும் 12 குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 104 போட்டிகள் நடைபெறுமென ஃபிஃபா அறிவித்துள்ளது.

இந்த உலகக் கோப்பைக்கான போட்டிகள் வரும் ஜூன் மாதம் அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவில் நடைபெறுகின்றன. கண்டங்கள் வாரியாக தேர்வாகிய 48 கால்பந்து அணிகளின் விவரங்கள்:

தேர்வு நடத்தும் நாடுகள்: கனடா, மெக்சிகோ, அமெரிக்கா.

ஆசியா: ஆஸ்திரேலியா, ஈரான், ஜப்பான், ஜோர்டான், தென் கொரியா, கத்தார், சௌதி அரேபியா, உஸ்பெகிஸ்தான், இராக்.

ஆப்பிரிக்கா: அல்ஜீரியா, கபோ வெர்டே, காங்கோ, ஐவரி கோஸ்ட், எகிப்து, கானா, மொராக்கோ, செனகல், தென்னாப்பிரிக்கா, துனிசியா.

வட, மத்திய அமெரிக்கா, கரீபியன்: குராசோ, ஹைதி, பனாமா.

தென் அமெரிக்கா: ஆர்ஜென்டீனா, பிரேசில், கொலம்பியா, ஈக்வாடர், பராகுவே, உருகுவே.

ஓசியானியா: நியூசிலாந்து.

ஐரோப்பா: ஆஸ்திரியா, பெல்ஜியம், போஸ்னியா & ஹெர்செகோவினா, குரோஷியா, செக், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, நார்வே, போர்ச்சுகல், ஸ்காட்லாந்து, ஸ்பெயின், ஸ்வீடன், ஸ்விட்சர்லாந்து, துருக்கி.

குரூப் ஏ: செக், மெக்சிகோ, தென்னாப்பிரிக்கா, தென் கொரியா.

குரூப் பி: கனடா, போஸ்னியா & ஹெர்செகோவினா, கத்தார், ஸ்விட்சர்லாந்து.

குரூப் சி: பிரேசில். ஹைதி, மொராக்கோ, ஸ்காட்லாந்து.

குரூப் டி: ஆஸ்திரேலியா, பராகுவே, துருக்கி, அமெரிக்கா.

குரூப் இ: குராசோ, ஈக்வாடர், ஜெர்மனி, ஐவரி கோஸ்ட்.

குரூப் எஃப்: நெதர்லாந்து, ஜப்பான், ஸ்வீடன், துனிசியா.

குரூப் ஜி: பெல்ஜியம், எகிப்து, ஈரான், நியூசிலாந்து.

குரூப் எச்: கேப் வெர்டே, சௌதி அரேபியா, ஸ்பெயின், உருகுவே.

குரூப் ஐ: பிரான்ஸ், நார்வே, செனகல், இராக்.

குரூப் ஜே: அல்ஜீரியா, ஆர்ஜென்டீனா, ஆஸ்திரியா, ஜோர்டான்.

குரூப் கே: கொலம்பியா, ஜமைக்கா, போர்ச்சுகல், உஸ்பெகிஸ்தான்.

குரூப் எல்: குரோஷியா, இங்கிலாந்து, கானா, பனாமா.

Summary

World Cup 2026 qualifying marathon ends, which team are in which group, 48 team details

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.