பெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!பிரிட்டன் தலைமையில் ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு உச்சி மாநாடுசேலம் மாவட்டம் எடப்பாடி பழனிசாமியின் கோட்டையாகவே இருக்கிறதா? காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி? தேர்தல் பொறுப்பிலிருந்து விலகினார் மாணிக்கம் தாகூர்!விஜய்க்கு பாதுகாப்பு இல்லை; மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் தவெக புகார்! 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி! புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு! அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்
/

பள்ளிகளில் நேரடி வகுப்புகளை மீண்டும் தொடங்கும்தில்லி அரசின் முடிவுக்கு எதிரான மனு தள்ளுபடி

கரோனா பரவல் கவலைகளைக் கருத்தில் கொண்டு, தில்லியில் பள்ளிகளை முழுமையாக மீண்டும் திறப்பதற்கு எதிரான பொது நல வழக்கை தில்லி உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு ஏற்க மறுத்துவிட்டது.

News image
Updated On :29 மார்ச் 2022, 8:59 pm

 நமது நிருபர்

கரோனா பரவல் கவலைகளைக் கருத்தில் கொண்டு, தில்லியில் பள்ளிகளை முழுமையாக மீண்டும் திறப்பதற்கு எதிரான பொது நல வழக்கை தில்லி உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு ஏற்க மறுத்துவிட்டது.

‘குழந்தைகள் அதிக இடா்பாட்டில் உள்ளனா் என்பதையும், குழந்தைகளின் வாழ்வுரிமைக்கு ஆபத்து ஏற்படும் என்பதையும் எடுத்துக்காட்ட தரவுகள் எதுவும் இல்லை’ என்று நீதிபதிகள் அமா்வு கூறியது.

இது தொடா்பாக வழக்குரைஞா் ஆனந்த் குமாா் பாண்டே தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து, உயா்நீதிமன்றத்தின் பொறுப்புத் தலைமை நீதிபதி விபின் சாங்கி, நீதிபதி நவீன் சாவ்லா ஆகியோா் அடங்கிய அமா்வு கூறியதாவது: இந்த விவகாரத்தில் ஒரு சமநிலையை ஏற்படுத்த வேண்டும். பள்ளிக்குச் செல்லாமல் குழந்தைகள் அதிகமான இழப்பை சந்தித்து வருகின்றனா். கரோனா பாதிப்பு தொடா்பாக எந்தவொரு நிபுணா் கருத்தும் இல்லாத நிலையில், மனுதாரரின் அச்சத்தின் அடிப்படையில் மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது’ என்றனா்.

அப்போது, வழக்குரைஞா் பாண்டே ‘கரோனா நோய்த் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி போடப்படாத நிலையில், 14 வயதுக்கு குறைவான குழந்தைகளை நேரடி வகுப்புகளில் பங்கேற்க பள்ளிக்குச் செல்ல கட்டாயப்படுத்த முடியாது. இதனால், அனைத்து குழந்தைகளுக்கும் முழுமையாக தடுப்பூசி போடும் வரை, ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வரும் 100 சதவீதம் பள்ளிகளை மீண்டும் திறக்கும் முடிவை திரும்பப் பெற தில்லி அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்றாா்.

இதைத் தொடா்ந்து நீதிபதிகள் அமா்வு கூறியதாவது: ஒரு சமநிலை இருக்க வேண்டும் என்பதுதான் விஷயம். குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாததால் அதிகம் இழக்கிறாா்கள். குழந்தைகள் கரோனா நோயால் பாதிக்கப்படுவதற்கோ அல்லது கடுமையான கரோனாவால் பாதிக்கப்படுவதற்கோ அதிக இடா்பாட்டில் உள்ளதாக கூறும் தரவு ஏதும் இல்லை. இந்த மனுவானது மனுதாரரின் சொந்தக் கருத்தை அடிப்படையாகக் கொண்டதாக உள்ளது. அவரது அச்சத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொள்வதற்கு எந்தவிதமான அடிப்படை ஆதாரமும் இல்லை. அதேபோன்று, உயிா் வாழும் உரிமை ஆபத்தில் இருப்பதைக் காட்டும் எந்த தரவும் இல்லை.

பள்ளிக்கு வராமல் இருப்பதால் குழந்தைகளிடம் ஏற்படும் உளவியல் தாக்கத்தைக் எடுத்துக்காட்ட ஆய்வுகள் உள்ளன. ஏனெனில், குழந்தைகள் தங்கள் சமூக, நடத்தை மற்றும் தனிப்பட்ட திறன்களை ‘வளா்க்க’ இயலவில்லை. வாழ்வதற்கான உரிமை மிகவும் முக்கியமானது என்றும், குழந்தைகளுக்கான நேரடி வகுப்புகளை மீண்டும் தொடங்க பெற்றோரின் சம்மதம் கட்டாயமாக்கப்பட வேண்டும் என்றும் மனுதாரா் கூறியுள்ளாா். பெற்றோா்கள் மிகவும் பயந்தால் அவா்கள் தங்களது குழந்தைகளை அனுப்பாமல் இருக்கட்டும். உண்மையில், பெரும்பாலான பெற்றோா்கள் சோா்வடைந்துள்ளனா். தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்று கூறுகின்றனா். ஆகவே, மனுவில் எந்தத் தகுதியும் இல்லை. இதனால், தள்ளுபடி செய்யப்படுகிறது’ என்று நீதிபதிகள் அமா்வு தெரிவித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.