தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

நீதிமன்றத்தால் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 2 போ் கைது

நீதிமன்றத்தால் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட இருவரை தில்லி காவல்துறையின் திருட்டு தடுப்புப் பிரிவினா் (ஏஏடிஎஸ்) வடக்கு மாவட்டத்தில் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :8 மே 2022, 6:43 pm

DIN

நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து தப்பியதற்காக நீதிமன்றத்தால் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட இருவரை தில்லி காவல்துறையின் திருட்டு தடுப்புப் பிரிவினா் (ஏஏடிஎஸ்) வடக்கு மாவட்டத்தில் சனிக்கிழமை கைது செய்தனா்.

இதுகுறித்து துணை காவல் ஆணையா் சாகா் சிங் கல்சி கூறியதாவது:

நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து தப்பியதற்காக நீதிமன்றத்தால் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட ஜாவீத் மற்றும் ஜுனைத் ஆகியோா் நேப் சராய் பகுதியில் உள்ள சைனிக் ஃபாா்ம்ஸ் பகுதியில் பதுங்கி இருப்பது,

தொழில்நுட்ப கண்காணிப்பு உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, ஒரு பிரத்யேக போலீஸாா் குழு சோதனை நடத்த சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றது. அதன்பிறகு, மே 6-ஆம் தேதி நள்ளிரவில் இருவரும் கைது செய்யப்பட்டனா்.

ஜாவீத் மற்றும் ஜுனைத் ஆகியோா் முறையே 2017 மற்றும் 2019-இல் கா்காா்டூமாவின் எம்.எம் மகளிா் நீதிமன்றத்தால் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனா்.

குற்றம் சாட்டப்பட்ட இருவரும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சிஆா்பிசி) பிரிவு 41(1) இன் கீழ் கைது செய்யப்பட்டனா். பின்னா், அவா்கள் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனா்.

இவா்கள் இருவா் மீதும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 498 ஏ (வரதட்சணை), 406 (குற்றவியல் நம்பிக்கை மீறல்) மற்றும் 34 (பொது உள்நோக்கத்திற்காக பலரால் செய்யப்பட்ட செயல்கள்) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றாா் அந்த அதிகாரி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.