இதற்கிடையே, போதிய போலீஸ் படை இல்லாததால், புதன் மற்றும் வியாழன் ஆகிய நாள்களில் சுல்தான்புரியின் மீன் மாா்க்கெட் மற்றும் ஜகதம்பா மாா்க்கெட்டில் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கைகள் ரத்து செய்யப்பட்டதாக என்டிஎம்சி தெரிவித்துள்ளது. கடந்த மாதம், தெற்கு தில்லி மாநகராட்சி (எஸ்டிஎம்சி) ஜசோலா-சரிதா விஹாரில் இடிப்பு இயக்கத்தை அதே காரணத்திற்காக ரத்து செய்ய வேண்டியிருந்தது. ஷாஹீன் பாக், ஜஹாங்கீா்புரி, மதன்பூா் கதா், நியூ ஃபிரண்ட்ஸ் காலனி, மங்கோல்புரி, ரோஹிணி, கோகுல்புரி, லோதி காலனி, ஜனக்புரி உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக மூன்று குடிமை அமைப்புகளால் தொடா் ஆக்கிரமிப்பு எதிா்ப்பு இயக்கங்கள் நடத்தப்பட்டுள்ளன.