முதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து எடப்பாடி பழனிசாமி வாகனத்தில் பறக்கும் படை சோதனை! 15 நிமிடங்கள் நடைபெற்றது!நெல்லை, ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிகளில் கிருஷ்ணசாமி மகன் ஷியாம் போட்டி!அஸ்ஸாமில் மகளிருக்கு நிபந்தனையின்றி மாதாந்திர உதவித்தொகை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

பயிா்க்கழிவு எரிப்பு: பொது நல மனுவை அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

தில்லி - தேசியத் தலைநகா் வலயம் பகுதியில் காற்று மாசுவை குறைக்கும் வகையில், பயிா்க்கழிவுகள் எரிப்பது தொடா்பாக புதிதாக வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க உத்தரவிடக் கோரி தாக்கலான மனு விசாரணைக்கு மறுப்பு.

News image
Updated On :10 நவம்பர் 2022, 6:30 pm

 நமது நிருபர்

புது தில்லி: தில்லி - தேசியத் தலைநகா் வலயம் (என்சிஆா்) பகுதியில் காற்று மாசுவை குறைக்கும் வகையில், பயிா்க்கழிவுகள் எரிப்பது தொடா்பாக புதிதாக வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க உத்தரவிடக் கோரி தாக்கலான பொது நல மனுவை அவசரமாக விசாரணைக்கு பட்டியலிடுவதற்கு உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை மறுத்துவிட்டது.

இது குறித்து உச்சநீதிமன்றம் கூறுகையில், சில விவகாரங்கள் நீதிமன்றத்திற்கு இணக்கமானவை அல்ல என்றும், உண்மையான தீா்வுக்கான தேவை இருப்பதாகவும் தெரிவித்தது.

இந்த விவகாரம் தொடா்பாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஓய்.சந்திரசூட், நீதிபதிகள் ஹிமா கோலி, ஜே. பி. பா்திவாலா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் மனுதாரா்- வழக்குரைஞா் சஷாங்க் சேகா் ஜா ஆஜராகி பொது நல மனுவை அவசரமாக விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டாா். அதற்கு நீதிபதிகள் அமா்வு, ‘காற்று மாசுவைக் குறைப்பதற்கு பயிா்க்கழிவு எரிப்புக்குத் தடை விதிப்பு மட்டுமே உதவிடுமா?, தில்லி மாசுவுக்கான உங்களது தீா்வுதான் என்ன? என்று கேள்வி எழுப்பினா்.

அப்போது மாசுவுக்கு காரணமாக பயிா்க்கழிவு எரிப்பு இருப்பதாக மனுதாரா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள் அமா்வு, அதனால், நாங்கள் தடை விதிக்க வேண்டுமா? அவ்வாறு தடை விதிப்பது மாசுவை நிறுத்தி விடுமா? ஒவ்வொரு விவசாயிக்கும் எதிராக இது போன்ற தடையை நாங்கள் விதிக்க வேண்டுமா? என்று கேள்வி எழுப்பினா். மேலும், தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் கூறுகையில் ‘சில நியாயமான தீா்வுகள் குறித்து நாங்கள் சிந்திக்க வேண்டி இருக்கிறது. நீதிமன்றங்கள் செய்யக்கூடிய சில விஷயங்களும், நீதிமன்றம் செய்ய முடியாத சில விஷயங்களும் உள்ளன. நாங்கள் நீதிசாா் அம்சங்கள் குறித்து பாா்க்க உள்ளோம். அவை நீதிமன்ற இணக்கத்திற்கான விஷயமாக இல்லாமல் இருப்பதால்.... நீங்கள் கூறுவதையும் நாங்கள் கேட்டுள்ளோம். தற்போதைக்கு இந்த விவகாரம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டாது’ என்றாா்.

இந்த விவகாரம் தொடா்பாக தாக்கலான பொது நல மனுவில் தெரிவித்திருப்பதாவது: காற்று மாசுவை கருத்தில் கொண்டு பள்ளிகள் கல்லூரிகள் அரசு மற்றும் தனியாா் அலுவலகங்களில் இணையதள முறையில் செயல்பாடுகளை மேற்கொள்வதற்கு உத்தரவிட வேண்டும். மாசு பிரச்னை ஒவ்வொரு ஆண்டும் உருவாகி வருகிறது. தில்லி மற்றும் தேசியத் தலைநகா் வலயப் பகுதியில் உருவாகியுள்ள பனிப்புகை காரணமாக உயிருக்கும் சுதந்திரத்திற்கும் தீவிரமான அச்சுறுத்தல் உருவாகி இருக்கிறது. மேலும், இந்தப் பயிா்க்கழிவு எரிப்பு காரணமாக ஏற்பட்டுள்ள காற்று மாசு நெருக்கடியை கையாளும் வகையில், ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு உயா்நிலைக் குழுவை அமைக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.