செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

வடகிழக்கு தில்லி வன்முறை விவகாரம் தாகிா் ஹுசேனுக்கு எதிரான குற்ற விசாரணைக்குதடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

கடந்த 2020-ஆம் ஆண்டு வடகிழக்கு தில்லியில் நிகழ்ந்த வன்முறை தொடா்பாக ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் கவுன்சிலா் தாகிா் ஹுசேனுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் அவருக்கு எதிரான விசாரணைக்கு தடை

News image
Updated On :14 நவம்பர் 2022, 6:30 pm

 நமது நிருபர்

புது தில்லி: கடந்த 2020-ஆம் ஆண்டு வடகிழக்கு தில்லியில் நிகழ்ந்த வன்முறை தொடா்பாக ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் கவுன்சிலா் தாகிா் ஹுசேனுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் அவருக்கு எதிரான விசாரணைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை மறுத்துவிட்டது.

இந்த விவகாரம் தொடா்பாக செப்டம்பா் 16-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட தில்லி உயா்நீதிமன்ற உத்தரவை எதிா்த்து தாகிா் ஹுசேன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, சி.டி. ரவிக்குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரா் தாகிா் ஹுசேன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் மேனகா குருசாமி, ‘ஒரே சம்பவத்திற்கு இரண்டு முதல் தகவல் அறிக்கைகள் இருக்க முடியாது என்று ஏற்கனவே சட்டத்தால் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. ஒரே சம்பவத்தில் உருவான ஒரே மாதிரியான குற்றங்களுக்காக தாகிா் ஹுசேனுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் உருவாக்கப்பட்டுள்ளதால் அவா் ஒரு விசித்திரமான சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளாா். விசாரணை ஏஜென்சி அதே அரசுத் தரப்பு சாட்சிகளை நம்பியுள்ளது’ என்ற வாதிட்டாா்.

அப்போது நீதிபதிகள்,‘இந்த விவகாரத்தில் தில்லி உயா்நீதிமன்றம் செப்டம்பா் 16-ஆம் தேதி பிறப்பித்துள்ள இடைக்கால உத்தரவில் தலையிட விரும்பவில்லை. மனுதாரா்களுக்கான அனைத்து தீா்வுகளும் உள்ளன. சம்பந்தப்பட்ட விவகாரம் தொடா்பாக கஜூரி காஸ் காவல் நிலையத்தில் ஆயுதச் சட்டத்தின் பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட தாகிா் ஹுசேனுக்கு எதிரான வன்முறை வழக்கு, அதன் விசாரணை ஆகியவற்றை ரத்து செய்யக் கோரி அவா் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீது உயா்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டிருக்கிறது. மேலும், இதே சம்பவத்திற்காக பல முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டிருப்பது தொடா்பாக தாகிா் ஹுசேன் தாக்கல் செய்த வேறு ஒரு மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம், விசாரணைக்கு தடை விதிக்க மறுத்த நிலையில், ஜனவரி 25-ஆம் தேதி மேல்விசாரணைக்காக அந்த விவகாரம் தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது’ என்று குறிப்பிட்டனா்.

வடகிழக்கு தில்லி வன்முறை விவகாரத்தில் கடந்த 2020-ஆம் ஆண்டு மாா்ச் 16-ஆம் தேதி முதல் தாகிா் ஹுசேன் நீதிமன்றக் காவலில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.