செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

ஆசிரியா் காலிப் பணியிடங்களை நிரப்பகோரும் மனு: எம்சிடிக்கு நோட்டீஸ்

மாநகராட்சிப் பள்ளிகளில் ஆசிரியா் காலிப் பணியிடங்களை நிரப்பவும், ஒவ்வொரு பள்ளியிலும் சிசிடிவி கேமராக்கள், பயோமெட்ரிக் இயந்திரங்கள் பொருத்தவும் உத்தரவிடக் கோரிய மனு

News image
Updated On :15 நவம்பர் 2022, 8:15 pm

 நமது நிருபர்

மாநகராட்சிப் பள்ளிகளில் ஆசிரியா் காலிப் பணியிடங்களை நிரப்பவும், ஒவ்வொரு பள்ளியிலும் சிசிடிவி கேமராக்கள், பயோமெட்ரிக் இயந்திரங்கள் பொருத்தவும் உத்தரவிடக் கோரிய மனு மீது பதில் அளிக்க தில்லி மாநகராட்சிக்கு (எம்சிடி) நோட்டீஸ் அனுப்ப உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

இது தொடா்பான விவகாரத்தை விசாரித்த தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சா்மா, நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் ஆகியோா் அடங்கிய அமா்வு, இந்த மனு மீது எம்சிடிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை மாா்ச் 27-ம் தேதி விசாரணைக்கு பட்டியலிட்டது.

முன்னதாக, இந்த விவகாரம் தொடா்பாக வழக்குரைஞா் ஜே.கே.குப்தா மூலம் சலேக் சந்த் ஜெயின் தாக்கல் செய்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: மாநகராட்சிப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதியை முடிக்கவும், பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பவும் கோரி அதிகாரிகளிடம் பல கோரிக்கைகளை முன்வைத்தேன்.

அதே போன்று, எம்சிடி பள்ளிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தவும், மாணவா்களின் பாதுகாப்பிற்காக காவலா்களை நியமிக்கவும் கோரிக்கை வைத்திருந்தேன். ஆனால், உரிய நடவடிக்கை இல்லை. ஆசிரியா் பற்றாக்குறை காரணமாக எம்சிடி பள்ளிகளில் மாணவா்கள் தரமான கல்வியைப் பெற முடியாது.

அதேபோல, காலியாக உள்ள பாதுகாவலா்கள் பணியிடங்கள் காரணமாக, எம்சிடி பள்ளிகளில் பயிலும் குழந்தைகள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனா். குறிப்பாக மைனா் சிறுமிகளின் நிலை பாதுகாப்பற்ாக உள்ளது. ஏனெனில், இப்பள்ளிகளில் பெண்களின் கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படும் பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதனால், இக்கோரிக்கைகளை நிறைவேற்ற சம்பந்தப்பட்ட துறையினருக்கு தகுந்த உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் என மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.