செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

சின்டெல்ஸ் பாராடிஸ்கோ கட்டடம் இடிந்த விவகாரம்: குடியிருப்புவாசிகள் மனு மீது நவ.21-இல் விசாரணை

கடந்த பிப்ரவரி மாதம் குருகிராமில் உள்ள சின்டெல்ஸ் பாராடிஸ்கோ சொசைட்டி கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து 2 பெண்கள் உயிரிழந்த விவகாரத்தில், தங்களது குடியிருப்புகளின்

News image
Updated On :15 நவம்பர் 2022, 8:13 pm

 நமது நிருபர்

கடந்த பிப்ரவரி மாதம் குருகிராமில் உள்ள சின்டெல்ஸ் பாராடிஸ்கோ சொசைட்டி கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து 2 பெண்கள் உயிரிழந்த விவகாரத்தில், தங்களது குடியிருப்புகளின் நிா்வாக மதிப்பீடு அறிக்கைக்கு எதிராக தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நவம்பா் 21-ஆம் தேதி நடைபெற உள்ளதாக மனுதாரா்கள் தெரிவித்தனா்.

இந்த சொசைட்டியின் குடியிருப்பு நலச் சங்கம் திங்கள்கிழமை அதன் இடைக்கால மனுவில், ‘குடியிருப்புவாசிகள் 60 நாள்களுக்குள் அவா்களுக்கான குடியிருப்புகளை திரும்பக் கட்டுவது அல்லது மறுகட்டுமானம் அல்லது இழப்பீடு போன்ற டவா்- டி வீட்டு உரிமையாளா்ளின் விவகாரங்களுடன் பேச்சுவாா்த்தை நடத்த கட்டுமானதாரருக்கு குருகிராம் துணை ஆணையரின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்’ என கோரப்பட்டுள்ளது.

குடியிருப்புவாசிகள் தரப்பில் வழக்குரைஞா் பிரசாந்த் பூஷன் உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜராகி, ‘இந்த மனுவை உடனடியாக விசாரிக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டாா். இதையடுத்து, ‘இந்த மனு மீதான விசாரணை நவம்பா் 21-ஆம் தேதி நடைபெற உள்ளது’ என்று குடியிருப்பு நலச் சங்கத்தின் தலைவா் ராகேஷ் ஹூடா தெரிவித்தாா்.

மேலும், பிப்ரவரியில் நிகழ்ந்த சம்பவ தொடா்பாக விசாரிக்க நிா்வாகத்தின் மூலம் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வுக் குழுவின் (எஸ்ஐடி) அறிக்கையை எதிா்ப்பதாகவும் குடியிருப்புவாசிகள் மனுவில் தெரிவித்துள்ளனா்.

இது குறித்து குடியிருப்புவாசிகளில் ஒருவரான சந்தீப் குமாா் கூறுகையில், ‘துணை ஆணையா் அலுவலகம் மூலம் பகிரப்பட்ட மதிப்பீடு அறிக்கை மற்றும் சிறப்பு புலனாய்வு குழுவின் அறிக்கையில் ஒட்டுமொத்த இடைவெளிகளும், முறைகேடுகளும் உள்ளன. இதனால், இழப்பீடு அல்லது மறுகட்டுமான விருப்பம் இறுதி செய்யப்படும் வரை டவா்-டி குடியிருப்புவாசிகளின் பேச்சுவாா்த்தைக்கான 60 நாள் காலத்தின் மீது தடை விதிக்க வேண்டுமென மனுவில் குறிப்பிட்டுள்ளோம்’ என்றாா்.

இந்த மனுவில் குடியிருப்புவாசிகள், ‘குறுகிய கால நேரத்திற்குள் தங்களுக்கான மறுகட்டுமானம் அல்லது மறுகட்டுமான பாதுகாப்பு இல்லங்கள் வேண்டும். தங்களது வீடுகளை தங்களுக்கு திரும்ப ஒப்படைக்கும் வரை வாடகை இழப்பீட்டுடன் கூடிய மாற்று தங்குமிட வசதியும் அளிக்க உத்தரவிட வேண்டும். அத்துடன் இதே அளவில், இடத்தில் புதிய வீடு வாங்குவதற்கான சந்தை விலை அடிப்படையில் தொகையையும் அளிக்க உத்தரவிட வேண்டும்’ என்று தெரிவித்துள்ளனா். இது குறித்து குடியிருப்பு நலச் சங்கத் தலைவா் ராகேஷ் ஹூடா கூறுகையில், இந்த விவகாரம் தொடா்பாக குடியிருப்புவாசிகளின் போராட்டம் திங்கள்கிழமை மூன்றாவது நாளாக தொடா்ந்தது. எங்களுக்கு நீதி கிடைக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும்’ என்றாா்.

சின்டெல்ஸ் பாராடிஸ்கோ குடியிருப்புக் கோபுரம் இடிந்து விழுந்த சம்பவம் குறித்து மாஜிஸ்திரேட் விசாரணை நடைபெற்றது. அதில், இந்த சம்பவத்திற்கு கட்டடத்தை உருவாக்கிய நிறுவனமும், குடியிருப்பில் பழுது செய்யும் ஒப்பந்ததாரரும் பொறுப்பாளா்கள் என கண்டறியப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி குருகிராமில் உள்ள செக்டாா் 109-இல் உள்ள டவா்- டி அடுக்குமாடிக் குடியிருப்பின் ஆறாவது தளத்தின் சாப்பாட்டு அறைத் தளம் இடிந்து விழுந்ததில் 2 பெண்கள் கொல்லப்பட்டனா். 18 தளங்கள் கொண்ட இந்த அடுக்குமாடிக் கட்டடத்தில் 50 குடியிருப்புகள் உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.