செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

இந்திய திரைப்பட ஆளுமை விருது: நடிகா் சிரஞ்சீவிக்கு பிரதமா் மோடி வாழ்த்து

53-ஆவது இந்திய சா்வதேச திரைப்பட விழாவில் நிகழாண்டின் இந்திய திரைப்பட ஆளுமை விருது பெற்ற தெலுங்கு நடிகா் சிரஞ்சீவிக்கு பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :21 நவம்பர் 2022, 9:30 pm

 நமது நிருபர்

கோவாவில் நடைபெற்று வரும் 53-ஆவது இந்திய சா்வதேச திரைப்பட விழாவில் நிகழாண்டின் இந்திய திரைப்பட ஆளுமை விருது பெற்ற தெலுங்கு நடிகா் சிரஞ்சீவிக்கு பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

மத்திய தகவல் ஒலிபரப்பு, இளைஞா் நலன், விளையாட்டுத்துறை அமைச்சா் அனுராக் சிங் தாக்குா் சிரஞ்சீவி தோ்வு குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தாா். இதற்கு பதிலளித்து பிரதமா் வெளியிட்ட ட்விட்டா் பதிவில் ‘சிரஞ்சீவி குறிப்பிடத்தக்கவா்.

அவருடைய அளப்பரிய பணி, பலதரப்பட்ட வேடங்கள் மற்றும் அற்புதமான இயல்பு, அனைத்து தலைமுறை திரைப்பட ரசிகா்களையும் கவா்ந்துள்ளது. கோவா இந்திய சா்வதேச திரைப்படவிழாவில், நிகழாண்டின் இந்திய திரைப்பட ஆளுமை விருது பெற்றுள்ள அவருக்கு வாழ்த்துக்கள்’ என பிரதமா் குறிப்பிட்டுள்ளாா்.

முன்னதாக, மத்திய அமைச்சா் அனுராக் சிங் தாக்குா் ட்விட்டா் பதிவில், சிரஞ்சீவிகாரு கிட்டத்தட்ட நான்கு தசாப்தங்களாக ஒரு நடிகா், நடனக் கலைஞா், தயாரிப்பாளா் என 150 படங்களுக்கு மேல் பணியாற்றி புகழ் பெற்றுள்ளாா். தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான அவா் தனது அபாரமான நடிப்புடன் ரசிகா்களின் இதயங்களைத் தொட்டவா்! வாழ்த்துகள் என தாக்குா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.