வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

‘ஆதாா்’ தரவுகளைப் புதுப்பிக்க மத்திய அரசு வேண்டுகோள்

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) வழங்கும் "ஆதார்' அடையாள அட்டையில் உள்ள தவறான தரவுகளை நீக்கும் வகையில், பொதுமக்கள் அதில் சமீபத்திய தரவுகளை புதுப்பிக்க வேண்டும்

News image
Updated On :11 அக்டோபர் 2022, 9:59 pm

 நமது நிருபர்

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) வழங்கும் "ஆதார்' அடையாள அட்டையில் உள்ள தவறான தரவுகளை நீக்கும் வகையில், பொதுமக்கள் அதில் சமீபத்திய தரவுகளை புதுப்பிக்க வேண்டும் என்று மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை கேட்டுக் கொண்டுள்ளது.
 இந்தியாவில் வாழும் அனைத்து குடிமக்களுக்கும் "ஆதார்'"என்று பெயரிடப்பட்ட தனித்துவ அடையாள எண் வழங்கப்படுகிறது. கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு அரசின் நிதி, மானியங்கள், பயன்கள், சேவைகள் ஆகியவற்றை உண்மையான பயனாளிகளை கண்டறிந்து வழங்குவதற்காக இது தொடங்கப்பட்டது.
 இதன்படி, எரிவாயு மானியம் முதல் ரேஷன், நூறு நாள் வேலை உள்ளிட்ட அரசின் பல்வேறு திட்டங்கள், சேவைகளின் பலன்களைப் பெற ஆதார் எண் இணைக்கப்படுகிறது. இந்தத் திட்டங்கள் மற்றும் சேவைகளைப் பெறுவதில் தவறுகளை களைவதற்கு, சமீபத்திய தனிப்பட்ட விவரங்களுடன் ஆதார் தரவுகளை பொதுமக்கள் புதுப்பிக்க வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
 இது குறித்து மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் கூறியிருப்பது வருமாறு:
 ஆதார் அட்டை தரவுகள் சரிபார்ப்பில் எந்த சிரமமும் ஏற்படாத வகையில், தனிப்பட்ட விவரங்களை, இருப்பிட விலாசங்களை புதுப்பிப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஆதார் தரவுகளை பொதுமக்கள் புதுப்பிக்க வேண்டும்.
 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆதார் அட்டையைப் பெற்று, அதன் பிறகு இந்த ஆண்டுகளில் புதுப்பிக்காத நபர்கள், அத்தகைய ஆதார் எண் வைத்திருப்பவர்கள் தகுந்த ஆவணங்களைப் பயன்படுத்தி புதுப்பிக்க வேண்டும். இது சம்பந்தமாக, ஆதார் எண் வைத்திருப்பவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்துடன் ஆவணத்தைப் புதுப்பிக்கும் வசதியை யுஐடிஏஐ வழங்கியுள்ளது. இதன் மூலம் தனிப்பட்ட அடையாளச் சான்று, முகவரிச் சான்று ஆவணங்களை சமர்ப்பித்து புதுப்பிக்க முடியும். பதிவு மையம் மூலமாக மட்டுமல்லாமல் இந்த வசதியை ஆதார் இணையதளம் வழியாகவும் (ட்ற்ற்ல்ள்://ம்ஹ்ஹஹக்ட்ஹஹழ்.ன்ண்க்ஹண்.ஞ்ர்ஸ்.ண்ய்/) மேற்கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளது.
 நாட்டில் கடந்த டிசம்பர் வரை 131 கோடி பேருக்கு ஆதார் எண் வழங்கப்பட்டுள்ளது. நேரடிப் பணப் பரிமாற்றத்தின் மூலம் சுமார் ரூ.2.25 லட்சம் கோடி வரை வழங்கப்படுகிறது. இது போன்று அரசின் பல்வேறு திட்டங்கள் மற்றும் சேவைகள் இந்த அடையாள எண் மூலம் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.