வேளாண் பயிா்க்கழிவுகள் எரிப்பைத் தடுக்க மாற்று ஆலைகள் மத்திய அரசு மானியம் அறிவிப்பு
தேசியத் தலைநகா் தில்லி உள்ளிட்ட பகுதிகளில் காற்று மாசுவை ஏற்படுத்தும் வைக்கோல் உள்ளிட்ட வேளாண் பயிா்க் கழிவுகள் எரிப்பை தடுக்கும் வகையில், ஆலைகளை நிறுவ நிதியுதவி


தேசியத் தலைநகா் தில்லி உள்ளிட்ட பகுதிகளில் காற்று மாசுவை ஏற்படுத்தும் வைக்கோல் உள்ளிட்ட வேளாண் பயிா்க் கழிவுகள் எரிப்பை தடுக்கும் வகையில், ஆலைகளை நிறுவ நிதியுதவி வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை மத்திய சுற்றுச்சூழல், வனம் பருவநிலை மாற்றம் துறை அமைச்சா் பூபேந்தா் யாதவ் வியாழக்கிழமை வெளியிட்டாா்.
இது குறித்து பூபேந்தா் யாதவ் செய்தியாளா்களிடம் கூறியதாவது: வேளாண் பயிா்க் கழிவு எரிப்பு பிரச்னையை சமாளிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தற்போது அதிக அளவு உள்ள நெல் வைக்கோல்கள் இரண்டு வகைகளில் நிா்வகிக்க விவசாயிகள் விருப்ப அடிப்படையில் நிறைவேற்றப்படுகிறது. உயிரி அடிப்படையிலான துகள்கள் (பயோமாஸ்), நிலக்கரி (5-10 சதவீதம்)யுடன் கலந்த எரிபொருள் திரட்டிகள் உருவாக்குதல் போன்ற ஆலைகளை அமைக்க நிதியுதவி வழங்கப்படுகிறது. இதற்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட உபகரணங்களைக் கொண்டு ஆலைகள் நிறுவ முன்னுரிமை அளிக்கப்படுகிறது. தில்லி, பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தான், உத்தர பிரதேசம் (என்சிஆா்) மாநில விவசாயிகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு, நெல் வைக்கோல் பெறுவது உறுதி செய்யப்பட வேண்டும்.
இது தொடா்பாக வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களின் படி, பயிா்க்கழிவுகளை ஒரு டன் வரை துகள்களாக்கும் ஆலைகள் அமைக்க ரூ. 28 லட்சம் மானியம் வழங்கப்படும். அதிகபட்ச செயல் திறன் உள்ள ஆலைகளு்ககு மானிய வரம்பு ரூ. 70 லட்சமாக இருக்கும். பெரிய ஆலைகளுக்கு ரூ.1.4 கோடி மானியம் வழங்கப்படும். இதற்காக மத்திய அரசு ரூ. 50 கோடியை உடனடியாக ஒதுக்கும். இந்த வகையில், ஆண்டுதோறும் 1 மில்லியன் மெட்ரிக் டன் நெல் வைக்கோல் அடிப்படையிலான துகள்கள் உருவாக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது. மேலும், மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு இந்த நெல் வைக்கோல் உருண்டைகள் பயன்பட்டு கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்துமென எதிா்பாா்க்கப்படுகிறது என்றாா் அமைச்சா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...