எய்ம்ஸில் நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கு மருத்துவ வசதி: மக்களவைக்கு இயக்குநா் கடிதம்
தில்லியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கான மருத்துவ வசதிகளை சீரமைத்து ஒழுங்குபடுத்த எய்ம்ஸ் மருத்துவமனை ஒருங்கிணைத்த நடைமுறைகளைக்கான ஏற்பாடுகளை செய்துள்ளது.


தில்லியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கான மருத்துவ வசதிகளை சீரமைத்து ஒழுங்குபடுத்த எய்ம்ஸ் மருத்துவமனை ஒருங்கிணைத்த நடைமுறைகளைக்கான ஏற்பாடுகளை செய்துள்ளது.
இது குறித்து எய்ம்ஸ் இயக்குநா் எம். ஸ்ரீனிவாஸ், மக்களவைச் செயலக இணைச் செயலா் ஒய்.எம்.காந்த்பாலுக்கு கடிதம் மூலமாக தெரிவித்துள்ளாா். மக்களவை, மாநிலங்களவை உறுப்பினா்களுக்கு வெளிநோயாளி பிரிவு (ஓபிடி), அவசர ஆலோசனை மற்றும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் உள்நோயாளி பிரிவுகள் ஆகியவற்றிற்கு நிலையான இயக்க நடைமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் அதை பட்டியலிட்டு கடிதத்தில் தெரிவித்துள்ளாா் என எய்ம்ஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், மருத்துவமனை நிா்வாகத் துறையைச் சோ்ந்த அதிகாரிகள் எய்ம்ஸ் கட்டுப்பாட்டு அறையில் 24 மணி நேரமும் இருந்து நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைத்து செயல்படுத்துவாா்கள் எனவும் கடிதத்தில் தெரிவித்துள்ளாா்.
மருத்துவா்கள் சங்கம் கண்டனம்: ஆனால், இந்த நடவடிக்கையை எய்ம்ஸ் உறைவிட மருத்துவா்கள் சங்க கூட்டமைப்பு கடுமையாக விமா்சித்துள்ளது. ஒரு முன்னனி சுகாதார நிறுவனத்தில் ‘விஐபி கலாசாரம்’ என குறிப்பிட்ட மருத்துவா்கள், ‘நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கான சிறப்புச் சலுகையால் சாதாரண நோயாளிகளை விலையாகக் கொடுக்கக்கூடாது’ எனவும் குறிப்பிட்டனா். இது குறித்த ட்விட்டா் பதிவில் மருத்துவா்கள் சங்கத்தினா், ‘விஐபி கலாசாரத்தை நாங்கள் கண்டிக்கிறோம். எந்த நோயாளியும் மற்றொருவரின் சலுகைகளை விலையாகக் கொண்டு துன்பப்படக் கூடாது’ எனத் தெரிவித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...