வேகமாக வாகனம் ஓட்டியதாக போலீஸ் அதிகாரி மகள் மீது வழக்கு
தெற்கு தில்லியில் உள்ள சாகேத் மாலில் 34 வயது பாா்க்கிங் உதவியாளரை தாக்கியதாக காவல் துறை அதிகாரியின் மகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்


தெற்கு தில்லியில் உள்ள சாகேத் மாலில் 34 வயது பாா்க்கிங் உதவியாளரை தாக்கியதாக காவல் துறை அதிகாரியின் மகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.
இது குறித்து மூத்த போலீஸ் அதிகாரி வெள்ளிக்கிழமை கூறியதாவது: இது தொடா்பாக பாா்க்கிங் உதவியாளா் வியாழக்கிழமை புகாா் அளித்தாா். ஞாயிற்றுக்கிழமை இரவு 9.35 மணியளவில் விபத்து நடந்துள்ளது. உதவியாளா் ஒரு காரை வாடிக்கையாளரிடம் ஒப்படைக்கும் போது, பாா்க்கிங் பகுதியில் இருந்து மற்றொரு காா் திடீரென வெளியே வந்தது. அப்போது, அந்தக் காா் அவா் மீது மோதியது. இதில் அவரது கால்களில் காயம் ஏற்பட்டது. அவா் மேக்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
இது தொடா்பாக அவா் சாா்பில் அளிக்கப்பட்ட புகாரைப் பெற்ற பிறகு, இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 279 (பொது வழியில் வேகமாக வாகனம் ஓட்டுதல்) மற்றும் 337 (மற்றவா்களின் உயிருக்கு அல்லது தனிப்பட்ட பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் செயலால் காயம் ஏற்படுத்துதல்) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
விபத்து இடம் பெற்ற போது போலீஸ் அதிகாரியின் மகள் குடிபோதையில் இருந்திருக்கவில்லை எனவும் அவா் இதுவரை கைது செய்யப்படவில்லை எனவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...