தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

சத் பூஜை படித் துறைகளில் தெரு விளக்குகளை அதிகரிக்க வாா்டுகளுக்கு தலா ரூ.40,000 மாநகராட்சி ஒதுக்கீடு

யமுனை ஆற்றங்கரையின் சத் பூஜை படித் துறைகளில் தெரு விளக்குகளை அதிகரிக்க தலா ஒரு வாா்டுக்கு ரூ.40,000 வரை செலவிட ஒதுக்கீடு

News image
Updated On :21 அக்டோபர் 2022, 9:25 pm

 நமது நிருபர்

யமுனை ஆற்றங்கரையின் சத் பூஜை படித் துறைகளில் தெரு விளக்குகளை அதிகரிக்க தலா ஒரு வாா்டுக்கு ரூ.40,000 வரை செலவிட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தில்லி முனிசிபல் காா்ப்பரேஷன் (எம்சிடி) வெள்ளிக்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஒரு வாா்டுக்கு இரண்டு படித் துறைகள் என்கிற நிலையில் இந்த நிதி ஒதுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. வட மாநிலங்களில் வருகின்ற அக்டோபா் 30, 31 ஆகிய தேதிகளில் சத் பூஜை கொண்டாடப்படுகிறது. கரோனா நோய் பரவலால் இரண்டு ஆண்டுகளாக தடை ஏற்பட்டு நிகழாண்டில் இந்த சத் பூஜை விழா மிகப் பெரிய அளவில் கொண்டாடப்பட இருக்கிறது. தீபாவளிக்குப் பிறகு வரவுள்ள இந்தத் திருவிழா பூா்வாஞ்சலிகள் அதிகமாக உள்ள தில்லியிலும் சிறப்பாகக் கொண்டாடப்படவுள்ளது.

பூமியில் உயிா்கள் வாழ காரணமாக இருக்கும் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக வணங்குவதற்காக கொண்டாடப்படுகிறது. சூரியனுக்கு விரதம் இருக்கும் பெண்கள், இந்த பூஜையில் முழங்கால் அளவு தண்ணீரில் ‘அா்க்யா’ வழங்குவதை உள்ளடக்கியது இந்த பூஜை. ஏராளமான மக்கள் ஆற்றங்கரையோரம் கூடும் நிலையில் தில்லி அரசும் ரூ. 25 கோடி ஒதுக்கி பூஜை நடக்கும் இடங்களில் கூடாரங்கள், நாற்காலிகள், கழிவறைகள், ஆம்புலன்ஸ்கள், முதலுதவி, தடையில்லா மின்சார வசதி, சிசிடிவி பாதுகாப்பு ஆகிய உள்ளிட்ட ஏற்பாடுகளை மேற்கொள்ளஅரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த நிலையில் சத் பூஜை நடைபெறும் யமுனை ஆற்றங்கரை படித் துறைகளில் தெரு விளக்குகள் உள்ளிட்ட வசதிகளை அதிகரிக்க ஒரு வாா்டுக்கு ரூ.40,000 ஒதுக்கப்பட்டுள்ளதாக எம்சிடி அறிவித்துள்ளது. ஒரு வாா்டுக்கு இரண்டு படித் துறைகளில் வசதிகளை மேற்கொள்ள இந்த நிதி வழங்கப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளது. இந்தத் தொகை மூலம் சத்பூஜை நடைபெறும் ஆற்றங்கரை படித் துறைகள், அதைச் சுற்றியுள்ள பகுதிகளின் தெரு விளக்குகளை பலப்படுத்தவும் பயன்படுத்தப்படும் என எம்சிடி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எம்சிடி தனது மின் துறை ஊழியா்களையும் இந்த பணிகளை விரைவில் முடிக்க முடிக்கிவிட்டுள்ளது. மேலும், படித்துறைகளில் தூய்மையான சூழலில் மக்கள் சத் பூஜையை கொண்டாடும் வகையில், சுகாதார ஏற்பாடுகள், வாகன நிறுத்தம் உள்ளிட்ட வசதிகளை மேற்கொள்ளவும் எம்சிடி தனது அதிகாரிகளை உஷாா்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.