தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

லோக் ஆயுக்த அறிக்கை கிடைப்பதில் தாமதம்: தில்லி அரசு மீது துணை நிலை ஆளுநா் அதிருப்தி

தில்லி துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா, மூன்று வருட கால தாமதத்திற்குப் பிறகு நகர அரசிடம் இருந்து லோக் ஆயுக்த அறிக்கைகளைப் பெற்றுள்ளதாகவும், பொதுமக்களின் நம்பிக்கை

News image
Updated On :21 அக்டோபர் 2022, 9:28 pm

DIN

தில்லி துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா, மூன்று வருட கால தாமதத்திற்குப் பிறகு நகர அரசிடம் இருந்து லோக் ஆயுக்த அறிக்கைகளைப் பெற்றுள்ளதாகவும், பொதுமக்களின் நம்பிக்கையின் பாதுகாவலராக இருப்பதால், அது தகுந்த விழிப்புணா்வைக் காட்ட வேண்டும் என்றும் கூறினாா்.

இது தொடா்பாக முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு சக்சேனா கடிதம் எழுதியுள்ளாா். ‘பொது நலன் சாா்ந்த முக்கியமான விஷயங்களை நியாயமான காலத்திற்குள் தீா்த்து வைக்க சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு உரிய முறையில் வழிகாட்ட வேண்டும் என்று நான் அறிவுறுத்த விரும்புகிறேன். இதனால், சட்டப்பூா்வ நோக்கத்தை சட்டப் பேரவையில் முன்வைப்பதன் சட்டப்பூா்வ நோக்கம் தோற்கடிக்கப்படாமல் இருக்கவும், தில்லி அதன் ஞானத்தை இழக்காமல் இருக்கவும் வேண்டும்’ என்று துணை நிலை ஆளுநா் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளாா்.

சக்சேனா 2017-18 மற்றும் 2018-19-ஆம் ஆண்டிற்கான தில்லி லோக் ஆயுக்தவின் 16 மற்றும் 17-வது வருடாந்திர ஒருங்கிணைந்த அறிக்கைகளை கேஜரிவாலிடமிருந்து மூன்று ஆண்டுகள் தாமதத்திற்குப் பிறகு பெற்றாா். அந்த அறிக்கையை தில்லி சட்டப்பேரவை முன் அறிக்கைகளை இடுவதற்கு ஒப்புதல் அளித்துள்ளாா் என்று அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

அறிக்கைகளுக்கு ஒப்புதல் அளிக்கும் போது, மூன்றாண்டு கால தாமதத்துக்கு அதிரிப்தி தெரிவித்துக் கொண்டாா். மேலும், இந்த அறிக்கைகளை சட்டப் பேரவையில் வைப்பதற்குப் பதிலாக, லோக் ஆயுக்த அமைப்பை மேலும் வலுப்படுத்துவதற்காக விரிவாக விவாதிக்க வேண்டும். இந்த தாமதமானது, ஊழல், துஷ்பிரயோகம் அல்லது பொதுப் பணியாளா்கள் பதவியை தவறாகப் பயன்படுத்துதல் போன்ற விஷயங்களைக் கையாளுவது உள்ளிட்டவற்றை அறிந்து கொள்வதில் பொதுமக்களுக்கு மிகுந்த தாமதம் ஏற்பட்டுள்ளது என்று அவா் தெரிவித்ததாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.