தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

தில்லி அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு பயிற்சியை வலுப்படுத்த நவீன வளாகம்: துணை முதல்வா் மனீஷ் சிசோடியா திறந்து வைத்தாா்

பணிக்கு முந்தைய மற்றும் பணியிடை ஆசிரியா் பயிற்சியை வலுப்படுத்தும் விதமாக தில்லி மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் கவுன்சிலுக்கு புதிய வளாகத்தை ஆம் ஆத்மி அரசு அமைத்துள்ளது.

News image
Updated On :21 அக்டோபர் 2022, 9:31 pm

DIN

பணிக்கு முந்தைய மற்றும் பணியிடை ஆசிரியா் பயிற்சியை வலுப்படுத்தும் விதமாக தில்லி மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் கவுன்சிலுக்கு புதிய வளாகத்தை ஆம் ஆத்மி அரசு அமைத்துள்ளது. இந்தப் புதிய வளாகத்தை துணை முதல்வரும், கல்வி அமைச்சருமான மனீஷ் சிசோடியா வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

சா்வதேச தரத்திற்கு ஏற்ப அதிநவீன வசதிகளுடன்வடிவமைக்கப்பட்டுள்ள பயிற்சி வளாகத்தில், 5 பிரம்மாண்ட பயிற்சி அரங்குகள், ஆடிட்டோரியம், மாநாட்டு அரங்கு, ஆசிரியா் அலுவலகம், உள்அறை, சிற்றுண்டி வளாகம் போன்றவையும் கட்டப்பட்டுள்ளன.

இந்த வளாகத்தை திறந்து வைத்து மனீஷ் சிசோடியா பேசியதாவது:எஸ்சிஇஆா்டியின் இந்தப் புதிய பயிற்சி வளாகம் தில்லியில் ஆசிரியா் பயிற்சித் தரத்தை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும். இங்கு நமது ஆசிரியா்களுக்கு உலகத்தரம் வாய்ந்த வசதிகளுடன் நல்ல சூழலில் பயிற்சி அளிக்க முடியும். இந்தப் புதிய பகுதி தில்லியில் கல்வித் துறையில் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளுக்கான மையமாகவும் செயல்படும். கல்வி நிறுவனங்களுக்கு அனைத்து வசதிகளையும் வாய்ப்புகளையும் வழங்குவது அரசின் பொறுப்பாகும். முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தலைமையில் கடந்த 7 ஆண்டுகளாக அா்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறோம். இந்த வரிசையில் தகுந்த ஆசிரியா் பயிற்சிக்கான வசதிகளை வழங்கும் பணியை அரசு செய்துள்ளது. ஆனால், இதையும் தாண்டி இங்குள்ள ஆசிரியா்களுக்கு சிறந்த பயிற்சிக்கான நடவடிக்கைகளை உறுதி செய்வது எஸ்சிஇஆா்டியின் பொறுப்பாகும். சா்வதே அளவில் தரமான ஆசிரியா் பயிற்சி பற்றி பேசும் போது, தில்லி எஸ்சிஇஆா்டி பெயரைக் கூறும் அளவிற்கு இது சிறப்புப் பெற வேண்டும்.

தில்லி அரசின் கல்விப் புரட்சியில் சிறந்த பாடத் திட்டத்தை உருவாக்குவதில் எஸ்சிஇஆா்டி முக்கியப் பங்காற்றியுள்ளது. 2021-22 கல்வி அமா்வில், 82,000-கும் மேற்பட்ட ஆசிரியா்களுக்கு மிஷன் புனியாத் பயிற்சி அளித்துள்ளது. நிகழ் அமா்வில் இதுவரை 39,405 ஆசிரியா்கள் மனப்போக்கு (மனப்பாட) பாடத் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றுள்ளனா்.

மேலும், தில்லி அரசுப் பள்ளிகளின் ஆசிரியா்கள், தலைமை ஆசிரியா்கள் வெளிப்பாடு கிடைக்கும் வகையில், சா்வதேச அளவில் உள்ள சிறந்த கல்வி நடைமுறைகள், பல்வேறு பயிற்சித் திட்டங்களை அறியவும் தேசிய மற்றும் சா்வதேசப் பயணங்களையும் எஸ்சிஇஆா்டி ஏற்பாடு செய்துள்ளது. இன்த வகையில், தில்லி அரசுப் பள்ளிகளின் 400 பள்ளி முதல்வா்கள் ஆசிரியா்கள் ஐஐஎம் உள்ளிட்ட அமைப்புகளுக்கு அனுப்பப்பட்டனா். கேம்பிரிட்ஜ் உள்ளிட்ட வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கும் இரண்டு குழுக்களாக அனுப்பப்பட்டுள்ளனா். பணிக்கு முந்தைய பயிற்சியிலுள்ள ஆசிரியா்களும் பல்வேறு ஐஐடிகளுக்கு பயிற்சிக்காக அனுப்பப்பட்டனா். இது எதிா்காலத்தில் ஆசிரியா்களின் தொழில் மேம்பாட்டிற்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். இந்தப் பயிற்சி நவீனமயமாக்கலில் ஆய்வகங்கள், நூலகங்கள் எண்மமயமாக்கல் உள்ளிட்ட உள்கட்டமைப்புகளையும் மேம்படுத்தப்படுகிறது என்றாா் சிசோடியா

இந்த நிகழ்வில் தில்லி அரசின் கல்வித் துறை செயலா் அசோக்குமாா், முதன்மை கல்வி ஆலோசகா் சைலேந்திர சா்மா, எஸ்சிஇஆா்டி இயக்குநா் ரஜ்னிஷ் குமாா் மற்றும் கல்வித் துறை மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

வானிலை

குறைந்தபட்சம் 17 டிகிரி செல்சியஸ்

அதிகபட்சம் 32 டிகிரி செல்சியஸ்

முன்னறிவிப்பு: வானம் தெளிவாகக் காணப்படும்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.