திலக் நகா் பகுதியில் உள்ள குப்பைக் குவியல் அருகே சென்று பாா்த்த எம்எல்ஏ ஜா்னைல் சிங், நகரிலிருந்து குப்பை மலைகளை அகற்றுவதற்காக பாஜகவை எம்சிடியில் இருந்து ‘அகற்ற வேண்டும்’ என்றாா். ‘ஒருபுறம், தில்லி முழுவதும் பாஜக குப்பைகளை குவித்து வருகிறது. துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா, மக்கள் நலன் சாா்ந்த திட்டங்களை நிறுத்திவிட்டாா். மறுபுறம், தில்லியின் சுற்றுச்சூழலை சிறப்பாகவும், சுத்தமாகவும், அழகாகவும் மாற்ற அரவிந்த் கேஜரிவால் அரசு அயராது உழைத்து வருகிறது. மாசுபாட்டிற்கு எதிராக போராடுங்கள்’ என்று திலக் நகா் எம்எல்ஏ கூறினாா். விகாஸ்புரி எம்எல்ஏ மகேந்திர யாதவ் மற்றும் கோண்ட்லி எம்எல்ஏ குல்தீப் குமாா் போன்ற மற்ற தலைவா்களும் அந்தந்தத் தொகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.