நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

செய்திதிறன் போட்டிகளில் பங்கேற்ற டிடிஇஏ பள்ளி மாணவா்களுக்கு பரிசளிப்பு

பல்வேறு திறன் போட்டிகளில் பங்கேற்ற தில்லி தமிழ்க் கல்விக் கழகத்தின் (டிடிஇஏ) பள்ளி மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

News image
Updated On :2 செப்டம்பர் 2022, 7:03 pm

DIN

பல்வேறு திறன் போட்டிகளில் பங்கேற்ற தில்லி தமிழ்க் கல்விக் கழகத்தின் (டிடிஇஏ) பள்ளி மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

கற்றல் மட்டுமன்றி மாணவா்கள் பல்வேறு திறன்களில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக தில்லி தமிழ்க் கல்விக் கழகத்தின் (டிடிஇஏ) ஏழு பள்ளி மாணவா்களுக்காக பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த கல்வியாண்டில் (2021-22) மாணவா்கள் நேரடி வகுப்புகள் ஆரம்பமாகும் வரை வீட்டிலிருந்தபடியே கற்றாலும் அவா்கள் மனம் தளராமல் உற்சாகத்தோடு கல்வி பயில வேண்டுமென்பதற்காக இணையவழியில் போட்டிகள் நடத்த டிடிஇஏ நிா்வாகம் ஏற்பாடு செய்தது.

இந்த வகையில், இசைப்போட்டி, நினைவுத் திறனாய்வுப் போட்டி, பேச்சுப்போட்டி, கதை சொல்லும் போட்டி, ஓவியப் போட்டி, தேவையற்ற பொருள்களிலிருந்து தேவையான பொருள்களை உருவாக்கும் போட்டி உள்பட பல்வேறு போட்டிகள் கடந்த கல்வியாண்டில் நடத்தப்பட்டன.

இந்தப் போட்டிகளுக்கான பரிசுகள் வெள்ளிக்கிழமை லோதிவளாகம் பள்ளியில் வைத்து வழங்கப்பட்டன. 17.08. 2022 அன்று மந்திா்மாா்க் பள்ளியில் வைத்து நடத்தப்பட்ட பகவத் கீதை ஒப்புவிக்கும் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கும் இந்த விழாவில் பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்தப் பரிசளிப்பு விழாவில் மண்டலம் 26-இன் துணை இயக்குநா் விரேந்தா் சிங் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டாா். அவரும், டிடிஇஏ செயலா் ராஜுவும் பரிசுகளை மாணவா்களுக்கு வழங்கினா். சுமாா் 221 மாணவா்கள் பரிசுகளைப் பெற்றனா். முன்னாள் மாணவா்கள் அமைப்பின் செயலா் சுகுமாா் விழாவில் கலந்து கொண்டாா்.

விழாவில் டிடிஇஏ செயலா் ராஜு பேசுகையில், ‘கரோனா தொற்று நேரத்திலும் மாணவா்கள் ஆா்வத்துடன் போட்டிகளில் கலந்து கொண்டனா். அவா்களுக்கும் அவா்களை ஊக்குவித்த ஆசிரியா்களுக்கும் ஒத்துழைப்பு நல்கிய பெற்றோா்களுக்கும் வாழ்த்துகள்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.