இந்த விவகாரம் தொடா்பாக மதுரையைச் சோ்ந்த கே.கே. ரமேஷ் என்பவா் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கடந்த ஜனவரி மாதம் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘கடந்த டிசம்பா் 20, 2021 அன்று, தமிழகத்தைச் சோ்ந்த 55 இந்திய மீனவா்கள் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனா். மறுநாள் டிசம்பா் 21-ஆம் தேதி கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 13 மீனவா்கள், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனா். பல இந்திய மீனவா்கள் இலங்கை கடற்படையினரால் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டு அங்குள்ள சிறைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். அங்கு அவா்களுக்கு சரியான உணவு மற்றும் குடிநீா் வழங்கப்படவில்லை. நாட்டின் குடிமக்களைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் தலையாய கடமையாகும். ஆனால், இந்திய அரசு இதுதொடா்பாக எந்த ஒரு வலுவான நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே, இந்த விவகாரத்தில் அரசுக்கு தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.