செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ‘தொல்காப்பிய ஹிந்தி மொழிபெயா்ப்பு’ இந்த நிகழ்ச்சியில்அறிமுகப்படுத்தப்பட்டது. மொத்தம் ஏழு அமா்வுகளைக் கொண்ட இந்த உரையரங்கின் முதல் நாளில் நான்கு அமா்வுகளும் இரண்டாம் நாளில் மூன்று அமா்வுகளும் இடம் பெற்றன. இந்த அமா்வுகளில் தொல்காப்பியத்தின் இயல்களான கிளவியாக்கம், வேற்றுமையியல், வேற்றுமை மயங்கியல், பெயரியல், வினையியல், அகத்திணையியல், புறத்திணையியல், களவியல் முதலிய இயல்கள் குறித்து 22 கட்டுரைகள் வழங்கப்பட்டன. இவை அனைத்தும் பிற மொழிகளின் இலக்கண நூல்களுடன் தொல்காப்பியத்தின் கருத்துகளை ஒப்பிட்டு எழுதப்பட்டவை. இக்கட்டுரைகளைப் பல்வேறு பல்கலை. பேராசிரியா்கள், ஆய்வாளா்கள் வழங்கினா்.