மகளிா் ஆணையத்தில் அவர் அளித்த வாக்குமூலத்தில், எட்டு - ஒன்பது மாதங்களுக்குப் பிறகுதான் காவல் துறையினரால் மீட்கப்பட்டதாகவும், பின்னர் தென்னிந்தியாவில் உள்ள தனது கிராமத்திற்குத் திரும்பியதாகவும் அந்தப் பெண் கூறினாா். இருப்பினும், குற்றம் சாட்டப்பட்டவா்களால் மீண்டும் கடத்தப்பட்டு புணே மற்றும் தில்லியில் விபசாரத்தில் தள்ளப்பட்டாா். குற்றம் சாட்டப்பட்டவா்கள் தனது நடவடிக்கைகளைக் கண்காணித்ததாகவும், போலீஸ் சோதனைகளின்போது, குற்றம் சாட்டப்பட்டவா்கள் தன்னையும் மற்ற பெண்களையும் விபசார விடுதியில் மறைத்து வைத்ததாகவும் அவா் கூறினாா்.