பங்குச்சந்தை: சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் குறைந்தது! ரூ. 5 லட்சம் கோடி இழப்பு!!பெரம்பூரில் விஜய்க்கு எதிராக திலகபாமா! தருமபுரியில் செளமியா அன்புமணி போட்டி!சௌமியா அன்புமணி தருமபுரி தொகுதியில் போட்டி!தங்கம் விலை மீண்டும் குறைவு! இன்றைய நிலவரம்! நாக்பூர் அருகே தடம்புரண்ட மெமு ரயில்! குவைத்தில் மின் உற்பத்தி நிலையம் மீது ஈரான் தாக்குதல்: இந்தியர் பலி 1,100-க்கும் அதிக போலி வெடிகுண்டு மிரட்டல்கள்: மைசூரைச் சேர்ந்தவர் கைது ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?
/

நாட்டில் 80% அரசுப் பள்ளிகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன: பிரதமர் மோடிக்கு முதல்வர் கேஜரிவால் கடிதம்

நாட்டில் 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும், அவற்றை மறுசீரமைக்க வேண்டும் எனவும் பிரதமர் மோடிக்கு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால்

News image
Updated On :7 செப்டம்பர் 2022, 10:11 pm

 நமது நிருபர்

நாட்டில் 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும், அவற்றை மறுசீரமைக்க வேண்டும் எனவும் பிரதமர் மோடிக்கு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் புதன்கிழமை கடிதம் எழுதியுள்ளார்.
 இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் கேஜரிவால் எழுதிய கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது:
 நாட்டில் 27 கோடி மாணவர்கள் தினமும் பள்ளிக்குச் செல்கின்றனர். அவர்களில் 18 கோடி மாணவர்கள் அரசுப் பள்ளிகளுக்கு செல்கின்றனர். 80 சதவீத அரசுப் பள்ளிகளின் நிலைமை மிக மோசமாக உள்ளது.
 14,500 பள்ளிகளை நவீனமயமாக்குவதற்கான திட்டத்தை மத்திய அரசு வகுத்துள்ளது. ஆனால், இதே வேகத்தில் நாம் வேலை செய்தால், அனைத்து அரசுப் பள்ளிகளையும் தரம் உயர்த்த நூறு ஆண்டுகள் ஆகிவிடும்.
 ஆகவே, நாட்டில் அரசு மூலம் நடத்தப்படும் 10 லட்சம் பள்ளிகளை மறுசீரமைப்பு செய்வதற்கான திட்டத்தை உருவாக்க வேண்டும். அந்தப் பள்ளிகள் அனைத்தும் ஆய்வகங்கள், பொலிவுறு (ஸ்மார்ட்) வகுப்பறைகள், நூலகங்கள், விளையாட்டு வசதிகள் உள்பட நவீன உள்கட்டமைப்புடன் மேம்படுத்தப்பட வேண்டும்.
 ஆகவே, அடுத்த ஐந்து ஆண்டுகளில் 10 லட்சம் பள்ளிகளை தரம் மேம்படுத்த அனைத்து மாநிலங்களுடன் ஆலோசித்து ஒரு திட்டத்தை உருவாக்க வேண்டும். ஒவ்வொரு குழந்தைக்குமான தரமான கல்வியை உறுதிப்படுத்தாமல், உலகில் நம்பர் ஒன் தேசமாக இந்தியா வர முடியாது என்று அவர் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
 பிஎம்ஸ்ரீ யோஜனா திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் 14,500 பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் என்று பிரதமர் மோடி திங்கள்கிழமை அறிவித்திருந்த நிலையில், இந்த கடிதத்தை முதல்வர் கேஜரிவால் பிரதமருக்கு எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.