கடந்த தேர்தலில் அளிக்கப்பட்ட 505 வாக்குறுதிகளில் 404 நிறைவேற்றப்பட்டுள்ளன என்று திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுத் தலைவர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், சுமார் 80,000 கருத்துகள் கேட்கப்பட்டு திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் அளிக்கப்பட்ட 505 வாக்குறுதிகளில் 404 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. திமுக அளித்த வாக்குறுதிகளில் 80 சதவிகிதம் நிறைவேற்றியுள்ளோம்.
101 வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை. மத்திய அரசின் ஒத்துழைப்பால்தான் நிறைவேற்ற முடியும் என்ற சில வாக்குறுதிகளை நிறைவேற்ற இயலவில்லை. அதிமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையை நான் படிக்கவில்லை. மக்கள் யாரும் படிப்பதில்லை.
நிறைவேற்றக் கூடிய தேர்தல் அறிக்கையை தயாரிக்க வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தியிருந்தார். திமுகவின் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை அதிமுகதான் காப்பியடித்துள்ளது. மகளிர் உரிமைத் தொகை, விடியல் பேருந்து திட்டம் போன்றவை இலவசத் திட்டத்தில் வராது.
பொள்ளாச்சி பாலியல் சம்பவத்திற்கு எஃப்ஐஆர் கூட போடாமல் காப்பாற்ற நினைத்தது அதிமுகதான். இந்த ஆட்சியில் பெண்களுக்கு எதிராக ஒரு குற்றம் நடந்தால் குற்றவாளிக்கு தண்டனை கிடைப்பதை முதல்வர் ஸ்டாலின் உறுதி செய்கிறார். இவ்வாறு குறிப்பிட்டார்.
Summary
Kanimozhi has said that 404 of the 505 promises made in the last election have been fulfilled.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தமிழ்நாட்டுக்கும் அதன் நலன்களுக்கு எதிரான சக்திகளுக்கும் இடையே தேர்தல்: கனிமொழி எம்.பி.

2021 தேர்தல் வாக்குறுதிகளில் 97% நிறைவேற்றம்: பினராயி விஜயன்

80,000 பேரிடம் கருத்து கேட்டு திமுக தோ்தல் அறிக்கை தயாரிப்பு: கனிமொழி

திமுக தேர்தல் அறிக்கை குறித்து கனிமொழி!
வீடியோக்கள்
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

