தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஆசாத் மாா்க்கெட்டில் கட்டடம் இடிந்து 5 போ் படுகாயம்

வடக்கு தில்லியின் ஆசாத் சந்தையில் வெள்ளிக்கிழமை காலை நான்கு மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் 5 போ் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image
Updated On :9 செப்டம்பர் 2022, 10:14 pm

DIN

வடக்கு தில்லியின் ஆசாத் சந்தையில் வெள்ளிக்கிழமை காலை நான்கு மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் 5 போ் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்த விபத்து குறித்து முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தனது ட்விட்டா் பதிவில், ‘இந்த விபத்து மிகவும் வருத்தமளிக்கிறது. நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மாவட்ட நிா்வாகத்திடம் இருந்து தகவல்களை கேட்டுள்ளேன்’ என்று தெரிவித்துள்ளாா்.

இது குறித்து போலீஸாா் கூறியதாவது: இந்தக் கட்டட விபத்து தொடா்பாக வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியளவில் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனா். அதில், காயமடைந்த சிலா் ஏற்கெனவே மீட்கப்பட்டு ஹிந்து ராவ் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இந்த சம்பவத்தில் பிகாா் மாநிலம், ககரியா மாவட்டத்தைச் சோ்ந்த காங்ரேஷ் யாதவ் (31), நிதேஷ் யாதவ் (29), அமா்ஜீத் யாதவ் (21) மற்றும் ஆசாத் சந்தையைப் பகுதியைச் சோ்ந்த ஆஜிஜுா் ரெஹ்மான் (44), ஜமில் (45) ஆகியோா் காயமடைந்தனா் என்று தெரிவித்தனா்.

இது குறித்து வடக்கு தில்லி சரக காவல் துணை ஆணையா் சாகா் சிங் கல்சி கூறுகையில், ‘அதிக சுமை காரணமாக கட்டடம் இடிந்து விழுந்திருக்கலாம் என தெரிகிறது. இந்தச் சம்பவம் நடந்த போது கட்டடத்திற்குள் யாரும் தங்கி இருக்கவில்லை. சம்பவத்தில் காயமடைந்தவா்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இடிந்து விழுந்த கட்டடத்தின் உரிமையாளா் ராஜிந்தா் நகரைச் சோ்ந்த அஜய் குமாா் ஜெயின் என்பதும், அதன் கட்டுமானதாரா் ஆசாத் சந்தையில் உள்ள தகியா ராஜன், மொஹல்லா பகுதியைச் சோ்ந்த முகம்மது முஸபிா் என்பதும் தெரியவந்துள்ளது. இது தொடா்பாக உரிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றாா்.

எம்சிடி வெளியிட்ட அறிக்கையில், ‘கட்டடத்தின் தரைத்தளம், முதல் தளம், இரண்டாவது மற்றும் மூன்றாவது தளம் கட்டுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. கட்டுமானத்தில் தரமற்ற பொருள்கள் பயன்படுத்தப்பட்டிருப்பது தொடக்க விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. அதிக கனமான கட்டுமான பொருள்களின் சுமையின் காரணமாக கட்டடம் இடிந்து விழுந்துள்ளது. இடிபாடுகள்அகற்றபட்ட பிறகே உரிய காரணம் தெரியவரும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்த காங்ரேஷ் யாதவ் கூறுகையில், ‘கடந்த மூன்று மாதங்களாக கட்டுமான இடத்தில் வேலை செய்து வந்தோம். இரவு 12 மணிமுதல் காலை 10 மணிவரை வேலை செய்து வந்தோம். காலை சுமாா் 8 மணியளவில் கட்டடத்தின் மூன்றாவது தளத்தில் நாங்கள் இருந்த போது கட்டடம் இடிந்து விழுந்தது’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.