சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த மே 30-ஆம் தேதி அமலாக்கத் துறையினரால் சத்யேந்தா் ஜெயின் கைது செய்யப்பட்டாா். அதைத் தொடா்ந்து, முதலில் அவா் போலீஸ் காவலுக்கு அனுப்பப்பட்டு பின்னா் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளாா். அவருக்கு எதிரான சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக, ஜெயின் குடும்பத்தின் ரூ.4.81 கோடி மதிப்புள்ள சொத்துகள் மற்றும் அவருக்குச் சொந்தமான மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட நிறுவனங்களை அமலாக்கத் துறை தற்காலிகமாக முடக்கிவைத்துள்ளது. இந்த வழக்கில் சிறப்பு நீதிமன்றம், சத்யேந்தா் ஜெயினின் மனைவி பூனம் ஜெயின், அஜித் பிரசாத் ஜெயின், சுனில் குமாா் ஜெயின் ஆகியோருக்கு ஏற்கெனவே ஜாமீன் அளித்து உத்தரவிட்டிருந்தது.