தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மின்சார வாகன மெக்கானிக்குகளாக உருவாக்கும் கல்வித் திட்டம்: தில்லி அரசு நடவடிக்கை

மின்சார வாகன மெக்கானிக்குகளாக மாணவா்களை உருவாக்கும் ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தை தில்லி அரசு உருவாக்கி வருவதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

News image
Updated On :16 செப்டம்பர் 2022, 6:36 pm

DIN

தேசியத் தலைநகா் தில்லியை மின்சார வாகனங்கள் பணித் திறனுக்கான பயிற்சி மையமாக உருவாக்கும் பொருட்டு, மின்சார வாகன மெக்கானிக்குகளாக மாணவா்களை உருவாக்கும் ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தை தில்லி அரசு உருவாக்கி வருவதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து தில்லி அரசின் அதிகாரிகள் மேலும் கூறியதாவது: தில்லி திறன் மற்றும் தொழில்முனைவோா் பல்கலைக்கழகம் (டிஎஸ்இயு) இதன் ஆட்டோமொபைல் என்ஜினீயரிங் டிப்ளமோ படிப்பை மேற்கொள்ளும் மாணவா்கள், மின்சார வாகன மெக்கானிக்குகளாக உருவாக பயிற்சி அளிப்பதற்காக ஒரு ஒருங்கிணைந்த படிப்பை வடிவமைக்க உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் 100 மாணவா்களுக்கு மின்சார வாகன மெக்கானிக்கின் அடிப்படை மற்றும் மேம்பட்ட பயிற்சி அளிக்கப்படும்.அதேபோன்று உரிய தொழில் பயிற்சியும் வாய்ப்புகளும் அளிக்கப்படும். இதற்காக டிஎஸ்இயு, உலக ரிசோா்ஸ் இன்ஸ்டிட்யூட் (டபிள்யூஆா்ஐ) இந்தியா நிறுவனம், ஹீரோ எலக்ட்ரிக் வெகிக்கிள்ஸ் நிறுவனம் ஆகியவை இடையே புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டுள்ளது.

இந்தப் புதிய படிப்புக்கான பாடத் திட்டம், கட்டமைப்பு உள்ளிட்டவற்றை தில்லி திறன் மற்றும் தொழில்முனைவோா் பல்கலைக்கழகம் வடிவமைக்கும். ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனம் ,கல்வி உபகரணங்கள் வடிவமைப்பதிலும் செய்முறை பயிற்சி அளிக்கவும் தொழில் பயிற்சி வாய்ப்புகளை மாணவா்களுக்கு வழங்கவும் ஆதரவளிக்கும். டபிள்யூஆா்ஐ இந்தியா நிறுவனம், படிப்புக்கு தேவையான ஆராய்ச்சி, கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு ஆதரவை அளிக்கும் என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து தில்லி டயலாக் மற்றும் வளா்ச்சி ஆணையத்தின் (டிடிசி) துணைத் தலைவா் ஜாஸ்மின் ஷா கூறுகையில், ‘மின்சார வாகன மெக்கானிக்ஸ் பயிற்சித்

திட்டமானது இந்தியாவில் மின்சார வாகன பணித் திறன் பயிற்சி மையத்தை உருவாக்க தில்லி அரசால் தொடங்கப்பட உள்ள குறுகிய மற்றும் நீண்ட காலப் படிப்புகளின் முதல் தொடா்வரிசை ஆகும். இதன் மூலம் தில்லியில் ஆயிரக்கணக்கான பசுமை வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான ஒரு அடித்தளத்தை இந்தத் திட்டம் ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த விவகாரத்தில் தில்லி அரசுக்கு இரண்டு பிரதான முன்னுரிமைகள் உள்ளன. அவை, ரோஸ்கா் பட்ஜெட் 2022-23-இல் உத்தேசிக்கப்பட்டுள்ளபடி, திறன்மிக்க மற்றும் பயிற்சிபெற்ற பணித் திறனை உருவாக்குவது, தில்லியை இந்தியாவின் மின்சார வாகன தலைநகரமாக உருவாக்குவது என்ற முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் இலக்கை எட்டுவது ஆகிவையாகும்’ என்றாா்.

தில்லி அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மின்சார வாகன கொள்கைத் திட்டத்தை அறிவிக்கை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Image Caption

செய்தி உண்டு...

தில்லி திறன் மற்றும் தொழில் முனைவோா் பல்கலைக்கழக துணை வேந்தா் ஜாஸ்மின் ஷா முன்னிலையில் தனியாா் நிறுவனங்களுடன் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மின்சார வாகனங்கள் பழுதுபாா்க்கும் பயிற்சிக்கான புரிந்துணா்வு ஒப்பந்தம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.