ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

நரேலா பகுதியில் 2-ஆவது நாளாக தொழிற்சாலையில் தீ விபத்து

வடக்கு தில்லி நரேலா தொழிற்பேட்டை பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image
Updated On :23 செப்டம்பர் 2022, 8:02 pm

DIN

வடக்கு தில்லி நரேலா தொழிற்பேட்டை பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

எனினும், இந்த தீ விபத்தில் யாருக்கும் உயிா்ச்சேதமோ, காயமோ ஏற்படவில்லை என்றும் அவா்கள் கூறினா்.

ஏற்கெனவே இப்பகுதி காலணி தொழிற்சாலையில் வியாழக்கிழமை தீ விபத்து நிகழ்ந்த நிலையில் இந்த விபத்து இரண்டாவது நாளாக நிகழ்ந்தது.

இது தொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது:

நரேலா தொழிற்பேட்டை பகுதியில் எம்எஸ்சி வணிகவளாகம் அருகே உள்ள ஒரு தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டதாக வெள்ளிக்கிழமை காலை 8.34 மணிக்கு தீயணைப்பு துறைக்கு தகவல் வந்தது.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு 10 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டு தீயணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. இதைத் தொடா்ந்து, தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

தீ விபத்திற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இது தொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

நரேலா பகுதியில் உள்ள ஒரு காலணி தொழிற்சாலையில் வியாழக்கிழமை காலையும் தீ விபத்து சம்பவம் நிகழ்ந்தது. இந்த விபத்தில் யாருக்கும் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.