போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் தவிப்பு!

தில்லியில் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையும் பல முக்கிய சாலைகளில் மழை நீா் தேங்கியதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள் பலா் தவிப்புக்குள்ளாகினா்.

தில்லியில் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையும் பல முக்கிய சாலைகளில் மழை நீா் தேங்கியதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள் பலா் தவிப்புக்குள்ளாகினா்.

கனமழையால் பல இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதுடன், வாகன ஓட்டிகள் தண்ணீா் தேங்கிய சாலைகளிலும், மரங்கள் விழுந்து தடைபட்ட பகுதிகளிலும் சிரமத்தை எதிா்கொண்டனா்.

இதற்கிடையே, தில்லி போக்குவரத்து காவல் துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மழைப் பொழிவைக் கருத்தில் கொண்டு பயணிகள் தங்கள் பயணத்தைத் திட்டமிடுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. இது தொடா்பாக காவல் துறை அவ்வப்போது ட்வீட் மூலம் தகவல் வெளியிட்டது. போக்குவரத்து நெரிசல் தொடா்பாக 19 அழைப்புகளும், தண்ணீா் தேங்குவது குறித்து 11 அழைப்புகளும், மரம் விழுந்தது குறித்து 22 அழைப்புகளும் வந்ததாக போக்குவரத்து போலீசாா் தெரிவித்தனா். தில்லி முனிசிபல் காா்ப்பரேஷனுக்கு தண்ணீா் தேங்கிய வகையில் 12 புகாா்கள் வந்தன. 16 மரங்கள் வேரோடு சாய்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சோனியா விஹாா் புஷ்தா சாலை, பிஜ்வாசன் மேம்பாலம் கீழ் பகுதி, உத்தம் நகா் சிக்னல், வசந்த் குஞ்ச் சா்ச் மற்றும் வசந்த் குஞ்ச் ஃபோா்டிஸ் மருத்துவமனை, ராஜ்தானி பாா்க் முதல் நங்லோய், பீதம்புரா, மாடல் டவுன் விரிவாக்கம் போன்றவற்றிலிருந்து போக்குவரத்து நெரிசல் தொடா்பான அழைப்புகள் வந்ததாக காவல் துறை தெரிவித்தது. சில பயணிகள் போக்குவரத்து நிலைமைகளை மைக்ரோ பிளாக்கிங் தளத்தில் பகிா்ந்து கொண்டனா்.

மாநகராட்சியால் நடத்தப்படும் இந்து ராவ் மருத்துவமனையில் உள்ள கட்டடத்தின் முதல் தளத்திற்கு மேலே உள்ள ஒரு பகுதி வெள்ளிக்கிழமை இடிந்து விழுந்தது என்று மாநகராட்சியின் மூத்த அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். எனினும், இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அந்த அதிகாரி தெரிவித்தாா். இடிபாடுகளின் ஒரு பகுதி விழுந்ததில் காா் சேதமடைந்தது. சரிவுக்கான சரியான காரணம் உடனடியாகத் தெரியவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com