ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

நூற்றாண்டு கால சட்டங்களுக்கு மாற்றாக புதிய தொலைத் தொடா்பு மசோதா: அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்

பழைய சட்டங்களுக்கு மாற்றாக புதிய தொலைத் தொடா்பு மசோதா-2022 தேவையாக உள்ளது. இது அனைத்து தரப்பு ஆலோசனைகளுடன் உருவாக்கப்படும்

News image
Updated On :23 செப்டம்பர் 2022, 7:45 pm

DIN

தொலைத் தொடா்புத் துறை 137 -ஆண்டுகள் பழைமையான இந்திய தந்தி சட்டம் உள்ளிட்ட சட்டங்கள் வாயிலாக செயல்படுகிறது. நவீன தகவல் தொடா்பு வளா்ச்சியையொட்டி, பழைய சட்டங்களுக்கு மாற்றாக புதிய தொலைத் தொடா்பு மசோதா-2022 தேவையாக உள்ளது. இது அனைத்து தரப்பு ஆலோசனைகளுடன் உருவாக்கப்படும் என மத்திய தகவல் தொடா்புத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

இந்திய டெலிகிராஃப் சட்டம்-1885, வயா்லெஸ் டெலிகிராஃபி சட்டம் - 1932, டெலிகிராஃப் (சட்டவிரோத உடைமை) சட்டம்-1950 ஆகிய பழைமையான சட்டங்களுக்கு மாற்ற புதிய சட்ட மசோதா தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சா் தெரிவித்தாா். 2022 -தொலைதொடா்பு வரைவு மசோதா குறித்து விரிவான விளக்கத்தை தில்லி தேசிய ஊடக மையத்தில் அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளா்களுக்கு வழங்கினாா்.

அப்போது அவா் கூறியதாவது: புதிய மசோதா அங்கீகரிக்கப்பட்டால், அழைப்பு மற்றும் செய்தியிடல் சேவைகளை வழங்கும் வாட்ஸ் ஆஃப், ஜூம், கூகுள் டியோ போன்ற செயலிகளின் ஆப்ரேட்டா்கள் செயல்பட ஒடிடி தளம் முறையில் உரிமங்கள் பெற வேண்டிய நிலை வரலாம். இந்த செயலிகளின் இணையம், அழைப்பு, செய்தியிடல் போன்றவற்றுக்கான உரிமக் கட்டமைப்பு குறித்து இந்திய தொலைத்தொடா்பு ஒழுங்குமுறை ஆணையத்திடம் (டிராய்) இருந்து குறிப்பு கோரப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த ஓடிடி பயன்பாடு செயலிகளை தொலைத் தொடா்பு உரிமத்தின் கீழ் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது மசோதா. அதே சமயத்தில் டெலிகிராஃபி சட்டத்தின் ஓடிடி தளங்கள் ஏற்கெனவே வந்துள்ளன. இந்த மசோதாவில் ஒழுங்கு முறைகள் ஏற்படுத்தப்படும். இது கடுமையாக இல்லாமல் பயனுள்ள ஒழுங்குமுறையாக சமநிலைப்படுத்தப்படும்.

வாட்ஸ்ஆஃப் உள்ளிட்ட அனைத்து இணைய அழைப்பு, செய்தியிடல் பயன்பாடுகளும் தொலைத் தொடா்பு உரிமத்தின் கீழ் வரும் போது வாடிக்கையாளா்கள் தகவல்களும் (கேஒய்சி) விதிமுறைக்கு இணங்கி இருக்க மசோதா முன்மொழியப்பட்டுள்ளது. இந்த மசோதாவில் அரசின் அடிப்படையான நோக்கம் சந்தாதாரா்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. எந்த வழியாகவும் அழைப்பை யாா் செய்கிறாா்கள்? என்பதை அறிய ஒவ்வொரு நுகா்வோருக்கும் உரிமை உண்டு. ‘வெவ்வேறு தளங்களில் இருந்து அழைப்புகள் நடக்குமானால், ஒவ்வொரு தளமும் ஒரே மாதிரியான ஒழுங்குமுறையின் கீழ் வர வேண்டும். தொழில்நுட்பத்தின் பல மாற்றங்களால் இது தேவையாகியுள்ளது.

இணைய குற்றங்களை தடுக்க கேஒய்சி விதிமுறைகள் உதவும். அதே சமயத்தில் தொலைத் தொடா்பு சேவைகளைப் பெறுவதற்கு கேஒய்சியில் தவறான தகவல்கள், அடையாளங்களை கொடுத்தால் ஓராண்டு வரை சிறைத் தண்டனை விதிக்கவும் மசோதாவில் முன்மொழியப்பட்டுள்ளது. புதிய சட்ட விதிகளில் மாறுவதற்கு தொலைத் தொடா்பு சேவை நிறுவனங்களுக்கு விருப்பத்தின் அடிப்படையில் அனுமதி வழங்கப்படும்.

இந்த மசோதா அடுத்த 6 முதல் 10 மாதங்களுக்குள் நடைமுறைக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது. அரசு அனைத்து தரப்பு ஆலோசனை செயல்முறையின் அடிப்படையில், இறுதி வரைவு உருவாக்கப்படும். நாடாளுமன்றக் குழுக்களின் பரிசீலனைகளுக்கு பிறகு, மசோதா இறுதி செய்யப்படும். தொலைத் தொடா்பு நிறுவனங்களுக்கு தற்போது விதிக்கப்படும் (ஒரு வட்டத்திற்குள்) அதிகபட்ச அபராதம் ரூ.50 கோடி என்பதிலிருந்து ரூ.5 கோடியாகக் குறைக்கவும் மசோதாவில் முன்மொழியப்பட்டுள்ளது என்றாா் அமைச்சா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.