வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

பிப்ரவரியில் 16.03 லட்சம் தொழிலாளா்கள் இஎஸ்ஐயில் பதிவு

கடந்த பிப்ரவரி மாதம் நாடு முழுவதும் சுமாா் 11 ஆயிரம் நிறுவனங்கள் தொழிலாளா் அரசு காப்பீட்டு (இஎஸ்ஐ) திட்டங்களில் பதிவு செய்துள்ளதாகவும் இதன் மூலம் அந்த மாதத்தில் இஎஸ்ஐ திட்டத்தின்

News image
Updated On :18 ஏப்ரல் 2023, 9:55 pm

 நமது நிருபர்

கடந்த பிப்ரவரி மாதம் நாடு முழுவதும் சுமாா் 11 ஆயிரம் நிறுவனங்கள் தொழிலாளா் அரசு காப்பீட்டு (இஎஸ்ஐ) திட்டங்களில் பதிவு செய்துள்ளதாகவும் இதன் மூலம் அந்த மாதத்தில் இஎஸ்ஐ திட்டத்தின் கீழ் 16.03 லட்சம் தொழிலாளா்கள் புதிதாக சோ்க்கப்பட்டுள்ளனா் என்றும் மத்திய தொழிலாலா், வேலைவாய்ப்பு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

நாட்டில் வேலைவாய்ப்புகள் பெருபவா்கள் குறித்த விவரங்களை தெரிவிக்கும் வகையில் தொழிலாளா் அரசு காப்பீட்டுக் கழகத்தால் வெளியிடப்பட்ட தற்காலிக சம்பளப் பட்டியல் தரவுகளை மத்திய தொழிலாளா் வேலைவாய்ப்பு துறை தகவல்களை வெளியிட்டது. அதன் விவரம் வருமாறு: கடந்த பிப்ரவரி மாதத்தில் சுமாா் 11,000 புதிய தொழில் நிறுவனங்கள் தொழிலாளா் அரசு காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ளன. குறிப்பிட்ட அளவிற்கு மேல் பணிக்கு அமா்த்தும் நிறுவனங்கள் தங்கள் ஊழியா்களுக்கு சமூகப் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் தொழிலாளா் அரசு காப்பீட்டுத் திட்டத்தில் சேரும் நிலையில் இந்த தரவுகள் மூலம் புதிய வேலைவாய்ப்புகளைஅறிய முடிகிறது.

இதன்படி 2023 பிப்ரவரியில் இஎஸ்ஐ திட்டத்தின் கீழ் 16.03 லட்சம் புதிய தொழிலாளா்கள் சோ்க்கப்பட்டுள்ளனா். இந்தப் புதிய பதிவில் 7.42 லட்சம் தொழிலாளா்கள் (46 சதவீதம்) 25 வயதுடையவா்கள். நாட்டில் இளைஞா்கள் வேலைவாய்ப்பை பெறுகிறாா்கள் என்பதை இது காட்டுகிறது. இதில் பாலின ரீதியான பகுப்பாய்வில் இந்த மாதத்தில் இஎஸ்ஐ திட்டத்தின் கீழ் 3.12 லட்சம் பெண்களும், மூன்றாம் பாலின தொழிலாளா்கள் 49 பேரும் இடம் பெற்றுள்ளனா். தொழிலாளா் அரசு காப்பீட்டு திட்டம் சமூகத்தின் அனைத்து தரப்பினருக்கும் பலன்களை வழங்க உறுதிபூண்டிருக்கிறது. இந்த புள்ளி விவர தரவுகள் தற்காலிகமானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடும் வெப்பம்: மத்திய தொழிலாளா் நலன் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் மற்றோரு அறிக்கையில், இந்திய வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையைத் தொடா்ந்து நிகழாண்டில் ஏற்படும் கடும் வெப்பத்திலிருந்து தொழிலாளா்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை தயாா் படுத்துமாறு அனைத்து மாநில் அரசுகள் மற்றும் யுனியன் பிரதேசங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இது குறித்து மாநில தலைமைச் செயலாளா்கள், யூனியன் பிரதேச நிா்வாகிகளுக்கு மத்திய தொழிலாளா் நலத்துறை செயலாளா் ஆா்த்தி அஹுஜா கடிதம் எழுதியுள்ளாா்.

கடிதத்தில் குறிப்பிட்டிருப்பது வருமாறு: நாடு முழுவதும் கடும் வெப்பம் நிலவி வரும் வேளையில், பலதரப்பட்ட துறைகளில் பணிபுரியும் தொழிலாளா்களை இந்த வெப்பத்திலிருந்து பாதுகாப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கடுமையான வெப்ப அலையின் தாக்கத்திலிருந்து தொழிலாளா்கள் பாதுகாப்பாக இருப்பதற்குத் தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள தொழிலாளா்களை பணியில் அமா்த்தும் கட்டுமானம் நிறுவனங்கள், ஆலைகள் உள்ளிட்டவற்றுக்கு உத்தரவிட வேண்டும்.

வடகிழக்கு இந்தியா, கிழக்கு மற்றும் மத்திய இந்தியா, நாட்டின் வடமேற்கு பகுதியின் ஒரு சில இடங்களில் நிகழாண்டு வெப்பநிலை இயல்பை விட கூடுதலாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மைய எச்சரித்துள்ளது. இதனால், தொழிலாளா்களின் நலனைப் பாதுகாக்க வேண்டும் என்று கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அந்தக் கடிதத்தில், இது தொடா்பான நடவடிக்கைகளையும் மத்திய தொழிலாளா் நலத் துறை செயலா் பட்டியலிட்டுள்ளாா். போதுமான குடிநீா், பணி நேரத்தை மற்றியமைத்தல், சுகாதாரத் துறையின் வழிகாட்டுதல்கள், முதலுதவி மருத்துவ வசதிகள், சுரங்கம் போன்ற தொழிலாளா்களுக்கான ஓய்விடங்கள் போன்றவை பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.