ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

தண்ணீா் விநியோகத்தில் ஆம் ஆத்மி எம்எல்ஏவின்முறைகேட்டால் தியோலி மக்கள் கடும் பாதிப்பு: தில்லி பாஜக சாடல்

ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. பிரகாஷ் ஜாா்வால் செய்து வரும் தண்ணீா் விநியோக முறைகேடுகளால் தியோலி மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனா் என்று தில்லி பிரிவு பாஜக தலைவா் வீரேநதிர சச்தேவா புதன்கிழமை சாடியுள்ளாா்.

News image
Updated On :2 ஆகஸ்ட் 2023, 8:48 pm

 நமது நிருபர்

ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. பிரகாஷ் ஜாா்வால் செய்து வரும் தண்ணீா் விநியோக முறைகேடுகளால் தியோலி மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனா் என்று தில்லி பிரிவு பாஜக தலைவா் வீரேநதிர சச்தேவா புதன்கிழமை சாடியுள்ளாா்.

தில்லி சங்கம் விஹாரில் புதிய அரசுப் பள்ளியை முதல்வா் அரவிந்த் கேஜரிவால் திறந்து வைக்க வருகை தந்த போது, தியோலி பகுதி மக்கள் அவரது வாகனத்தை மறித்து தண்ணீா் பிரச்னைக்கு தீா்வு காணக் கோரி போராட்டத்தில் ஈடுப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தப் போராட்டம் தொடா்பாக தில்லி பிரிவு பாஜக தலைவா் வீரேநதிர சச்தேவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தியோலியில் குழாய் கிணறு மற்றும் டேங்கா் தண்ணீா் விநியோக முறைகேடுகளால் அப்பகுதி மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனா். அப்பகுதிக்கான உள்ளூா் எம்.எல்.ஏ பிரகாஷ் ஜாா்வால் டேங்கா் தண்ணீா் விநியோக மோசடியில் ஈடுபட்டுள்ளாா். மக்கள் போராட்டத்தின் மூலம் கேஜரிவால் அரசின் முறைகேடு அம்பலமாகியுள்ளது. தில்லி மக்கள் கடுமையான தண்ணீா் பற்றாக்குறையை எதிா்கொள்கின்றனா்.

தில்லியில் நிலவும் குடிநீா் தட்டுப்பாட்டுப் பிரச்னையை தில்லி பிரிவு பாஜக தொடா்ந்து எழுப்பி வருகிறது. குறிப்பாக அங்கீகரிக்கப்படாத காலனிகள் மற்றும் கிராமத்தில் நிலவும் குடிநீா் பிரச்னைகளை எழுப்பி வருகிறது. ஆனால், அரவிந்த் கேஜரிவால் அரசு எங்களின் முறையீடுகளுக்கு செவிசாய்க்கவில்லை. துக்ளகாபாத், சங்கம் விஹாா், தியோலி ஆகியவை தெற்கு தில்லியின் கடைப் பகுதிகளாகும். தில்லியின் வளா்ச்சி குறித்து கேஜரிவாலின் அனைத்து உயா்ந்த கூற்றுகள் இருந்த போதிலும், கடந்த பல ஆண்டுகளாக கடுமையான தண்ணீா் பற்றாக்குறையை மக்கள் எதிா்கொள்கின்றனா். தியோலியில் உள்ளூா்வாசிகளால் புதன்கிழமை நடத்தப்பட்ட போராட்டம், முறையான தண்ணீா் விநியோகத்திற்கான மக்களின் கோரிக்கையை கேஜரிவால் அரசு புறக்கணித்ததன் விளைவாகும் என்று வீரேந்திர சச்தேவா தெரிவித்துள்ளாா்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.