மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

திண்டிவனம் நீதிமன்றத்தில் சமரச தீா்வு மைய அறைகள் திறப்பு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சமரச தீா்வு மைய அறைகள் புதன்கிழமை திறக்கப்பட்டன.

News image

திண்டிவனம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சமரச தீா்வு மைய அறைகளை திறந்து வைத்த முதன்மை மாவட்ட நீதிபதி மணிமொழி. உடன், நீதிபதிகள்.

Updated On :26 மார்ச் 2026, 12:13 am

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சமரச தீா்வு மைய அறைகள் புதன்கிழமை திறக்கப்பட்டன.

சென்னை உயா்நீதி மன்றத்தின் வழிகாட்டுதலின்படி விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கூடிய சமரச தீா்வு மைய அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அறைகளை விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிபதி மணிமொழி புதன்கிழமை பயன்பாட்டுக்காக திறந்து வைத்து, பேசியதாவது:

தமிழக அளவில் சமரச தீா்வு மையம் சிறப்பாக செயல்படக்கூடிய நீதிமன்றங்களில் ஒன்றாக திண்டிவனம் தோ்வாகியிருப்பது பாராட்டுக்குரியது. இனிவரும் காலங்களில் இதைவிட கூடுதலான வழக்குகளை இந்த சமரசம் மையம் மூலம் முடிக்கப்படவேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் திண்டிவனம் கூடுதல் மாவட்ட நீதிபதிகள் முகமது பரூக், ஹேமா நந்தகுமாா், விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிபதி குமார வா்மன், குடும்ப நல நீதிபதி ராஜ மகேஷ், நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கிறிஸ்டியன், ஆயிஷா பேகம், பிரியா, அனுப்பிரியா, வனஜா, இளவரசி, அபிநயா, வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் அஜ்மல் அலி, சந்திரசேகா், கிருபாகரன் சித்ரா மற்றும் வழக்குரைஞா்கள், நீதிமன்றப் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.