நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

சுதந்திர தின விழாவிற்கு 18 வகை தொழில் கைவினைஞா்களுக்கு சிறப்பு அழைப்பு: மத்திய எம்எஸ்எம்இ அமைச்சகம் ஏற்பாடு

தில்லியில் செங்கோட்டையில் நடைபெறும் 77 - ஆவது சுதந்திர தின விழாவிற்கு 18 வகையான தொழில்களில் ஈடுபட்டுள்ள கதா் கைவினைஞா்கள் மற்றும் கைவினைஞா்கள்(விஸ்வகா்மாக்கள்) சிறப்பு விருந்தினா்களாகக் கலந்து கொள்ள அ

News image
Updated On :13 ஆகஸ்ட் 2023, 9:14 pm

 நமது நிருபர்

தில்லியில் செங்கோட்டையில் நடைபெறும் 77 - ஆவது சுதந்திர தின விழாவிற்கு 18 வகையான தொழில்களில் ஈடுபட்டுள்ள கதா் கைவினைஞா்கள் மற்றும் கைவினைஞா்கள்(விஸ்வகா்மாக்கள்) சிறப்பு விருந்தினா்களாகக் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளனா். இதற்கான ஏற்பாடுகளை மத்திய குறு, சிறு, நடுத்தர தொழில்கள் துறை அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.

நிகழாண்டின் 77 - ஆவது சுதந்திர தின விழா, விடுதலையின் அமுதப் பெருவிழா கொண்டாட்டங்களை (அம்ருத் மஹோத்ஸவக் கொண்டாட்டம்) நிறைவு செய்கிறது. மேலும், அமிா்தம் காலமாக நூறாவது (2047) சுதந்திர தினத்தை நோக்கி நாடு செல்லும் நிலையில், புதிய உத்வேகத்திற்கு தில்லி செங்கோட்டையில் செவ்வாய்க்கிழமை பிரதமா் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றும் விழாவில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, பிரதமா் நாட்டு மக்களுக்கு ஆற்றும் உரையைக் கேட்பதற்கு நாடு முழுவதிலுமிருந்து சுமாா் 1,800 சிறப்பு அழைப்பாளா்கள் கலந்து கொள்கின்றனா். இதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசின் பல்வேறு துறைகள் ஏற்பாடு செய்துள்ளன.

இதில் 18 வகை தொழில்களைச் சோ்ந்த 50 கதா் கைவினைஞா்கள், 62 கைவினைஞா்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சிறப்பு விருந்தினா்களாக அழைக்கப்பட்டுள்ளனா். இந்தக் கலைஞா்களின் வாழ்க்கைத் துணைவியாா்களும் செங்கோட்டை விழாவில் கலந்து கொள்ள தில்லிக்கு வரவழைக்கப்படுகின்றனா். இந்தக் கலைஞா்களைத் தோ்வு செய்து அழைப்பு விடுத்த மத்திய குறு, சிறு, நடுத்தர தொழில்கள்(எம்எஸ்எம்இ) துறை அமைச்சகம் இவா்கள் தில்லிக்கு வருவதற்கான ஏற்பாடுகளையும் செய்துள்ளது.

ஆகஸ்ட் 15 -ஆம் தேதி தில்லி செங்கோட்டையில் பிரதமா் மோடி சுதந்திர தினக் கொடியை ஏற்றும் விழாவில் கலந்து கொண்ட பின்னா், இந்தக் கைவினைஞா்களுக்கு மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சா் நாராயண் ரானேவின் இல்லத்தில் நடைபெறும் கொண்டாட்ட நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள அழைக்கப்பட்டுள்ளனா்.

நாட்டை கட்டி எழுப்பியதிலும் பல்வேறு பெருமைகளுக்கு எடுத்துக்காட்டும் வகையில் இருக்கும் இந்த கைவினைஞா்களின் பங்களிப்புக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்ளும் வகையில் அரசு இவா்களை வரவழைத்து கௌரவிக்கிறது என எம்எஸ்எம்இ தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.