தில்லியில் லேசான மழையால் மேக மூட்ட வானிலை
தேசியத் தலைநகா் தில்லியில் சுதந்திர தினமான செவ்வாய்க்கிழமை மத்திய தில்லி, தெற்கு தில்லி, காஜியாபாத், நொய்டா உள்பட பல பகுதிகளிலும் பகலில் லேசான மழை பெய்தது.


புது தில்லி: தேசியத் தலைநகா் தில்லியில் சுதந்திர தினமான செவ்வாய்க்கிழமை மத்திய தில்லி, தெற்கு தில்லி, காஜியாபாத், நொய்டா உள்பட பல பகுதிகளிலும் பகலில் லேசான மழை பெய்தது. இதனால், மேக மூட்ட வானிலையுடன் வெயில் மற்றும் புழுக்கம் குறைந்து காணப்பட்டது.
தில்லியில் வெள்ளி, சனி ஆகிய இரு நாள்களிலும் வெயிலின் தாக்கம் மீண்டும் அதிகரித்திருந்தது. ஞாயிற்றுக்கிழமை பகலில் மிதமான வெயிலின் தாக்கம் இருந்த போதிலும், இயல்பைவிட அதிகபட்ச வெப்பநிலை ஒரு டிகிரி கூடியிருந்தது. திங்கள்கிழமை மிதமான வெயிலின் தாக்கம் நீடித்தது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை பகலில் லேசானமழை பெய்ததால் புழுக்கம் குறைந்திருந்தது. மாலையில் லேசான காற்றும் வீசியது. தில்லி சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியளவில் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் மழை ஏதும் பதிவாகவில்லை.
வெப்பநிலை: தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங் ஆய்வகத்தில் செவ்வாய்க்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பு நிலையில் இருந்து ஒரு டிகிரி அதிகரித்து 27.1 டிகிரி செல்சியஸாக பதிவாகி இருந்தது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பு நிலையில் இருந்து 1 டிகிரி அதிகரித்து 35.2 டிகிரி செல்சியஸாக பதிவாகி இருந்தது.
காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணி அளவில் 85 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 68 சதவீதமாகவும் பதிவாகி இருந்தது.
‘மிதமான’ பிரிவில் காற்றின் தரம்: மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் (சிபிசிபி) தரவுகளின்படி, மாலை 7.29 மணிக்கு ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு 106 புள்ளிகளாகப் பதிவாகி ‘மிதமான’ பிரிவில் இருந்தது. மேலும், தலைநகரில் ஐடிஓ, நேரு நகா், மதுரா சாலை, ஷாதிப்பூா் உள்பட பெரும்பாலான இடங்களில் காற்றின் தரக் குறியீடு 100 முதல் 200 புள்ளிகளுக்கு இடையே பாதிவாகி ‘மிதமான’ பிரிவில் இருந்தது.
முன்னறிவிப்பு: இதற்கிடையே, ‘புதன்கிழமை (ஆகஸ்ட் 16) வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும். குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சிஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்’ என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...