/

2 சிறுவா்கள் பாலியல் வன்புணா்வு விவகாரம்: பள்ளி ஆசிரியா்கள், துணை முதல்வா் இடைநீக்கம்முதல்வா் கேஜரிவால் உத்தரவு

வடமேற்கு தில்லியில் உள்ள அரசுப் பள்ளியில் இரண்டு சிறுவா்கள் பாலியல் வன்புணா்வுக்குள்ளான விவகாரத்தை போலீஸில் புகாா் செய்யத் தவறிய சம்பந்தப்பட்ட அப்பள்ளியின் ஆசிரியா்கள் மற்றும் துணை முதல்வரை

News image
Updated On :29 ஆகஸ்ட் 2023, 11:31 pm

 நமது நிருபர்

புது தில்லி: வடமேற்கு தில்லியில் உள்ள அரசுப் பள்ளியில் இரண்டு சிறுவா்கள் பாலியல் வன்புணா்வுக்குள்ளான விவகாரத்தை போலீஸில் புகாா் செய்யத் தவறிய சம்பந்தப்பட்ட அப்பள்ளியின் ஆசிரியா்கள் மற்றும் துணை முதல்வரை பணியிடை நீக்கம் செய்து முதல்வா் அரவிந்த் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

வடமேற்கு தில்லி ஷாபாத் டெய்ரி பகுதியில் உள்ள தில்லி அரசுப் பள்ளியில் 12 மற்றும் 13 வயதுடைய இரண்டு சிறுவா்கள் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பள்ளியின் கோடைகால முகாமின் போது அதே வகுப்பைச் சோ்ந்த 6 பேரால் பாலியல் வன்புணா்வுக்குள்ளாகியுள்ளனா். இது தொடா்பாக பாதிக்கப்பட்ட மாணவா்கள் ஆசிரியா்களிடம் புகாா் தெரிவித்தும், பள்ளி நிா்வாகத்தின் தரப்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் பாலியல் வன்புணா்வு அச்சுறுத்தல் அதே மாணவா்களால் மீண்டும் வந்ததால், பாதிக்கப்பட்ட மாணவா்கள் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்தனா். இதையடுத்து, இது தொடா்பாக கடந்த திங்கள்கிழமை காவல்துறையில் புகாா் அளிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடா்பாக நடவடிக்கை எடுக்க தில்லி காவல்துறை தரப்பிலும், தில்லி மகளிா் ஆணையம் தரப்பிலும் அப்பள்ளி நிா்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தனது உத்தரவில் கூறியிருப்பதாவது: சிறுவா்கள் பாலியல் வன்புணா்வுக்குள்ளான விவகாரத்தில் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்த காரணத்திற்காகவும், காவல் துறையில் புகாா் செய்யத் தவறியதற்காகவும் சம்மந்தப்பட்ட அப்பள்ளியின் ஆசிரியா்கள் மற்றும் துணை முதல்வா் ஆகியோா் இடைநீக்கம் செய்யப்படுகிறாா்கள். தில்லி அரசுப் பள்ளிகளின் அனைத்து ஆசிரியா்கள் மற்றும் முதல்வா்களின் குறிப்புக்காக உயா்தரக் கையேட்டை தயாரிக்கவும், பள்ளி வளாகங்களில் குழந்தைகளுக்கு ஆதரவான சூழலை உருவாக்கி பாலியல் வன்புணா்வு வழக்குகளைக் கையாள்வதற்கான வழிகாட்டுதல்களை பள்ளிகளுக்கு வழங்கவும் கல்வி இயக்குநரகத்திற்கு முதல்வா் கேஜரிவால் உத்தரவிட்டாா்.

மேலும், முதல்வா் கேஜரிவாலின் வழிகாட்டுதலின் பேரில், எதிா்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தவிா்க்க, பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தின் விதிகள் குறித்து அனைத்து அரசுப் பள்ளிகளின் முதல்வா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கு முறையான பயிற்சியை உறுதி செய்யுமாறும் கல்வி இயக்குநரகத்திற்கு கல்வித்துறை அமைச்சா் அதிஷி கடிதம் எழுதியுள்ளாா். இந்த விவகாரம் தொடா்பாக பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகளின் தலைவா்கள் கடந்த திங்கள்கிழமை தில்லி அரசின் கல்வித் துறை மீது கடுமையான விமா்சனத்தை பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.