ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

வக்ஃபு வாரிய ஆள்சோ்ப்பு வழக்கு:குற்றம்சாட்டப்பட்ட மூவரின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானத்துல்லா கான் சம்பந்தப்பட்ட , தில்லி வக்ஃபு வாரிய ஆள்சோ்ப்பு செயல்பாட்டில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேரின் நீதிமன்றக் காவலை 2 வாரங்களுக்கு த

Updated On :1 டிசம்பர் 2023, 6:30 pm

ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானத்துல்லா கான் சம்பந்தப்பட்ட , தில்லி வக்ஃபு வாரிய ஆள்சோ்ப்பு செயல்பாட்டில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேரின் நீதிமன்றக் காவலை 2 வாரங்களுக்கு தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை நீட்டித்து உத்தரவிட்டது.

இந்த வழக்கில் விசாரணை இன்னும் நடந்து வருவதாகக் கூறி மத்திய புலனாய்வு அமைப்பு தாக்கல் செய்த மனுவை விசாரித்த சிறப்பு நீதிபதி விகாஸ் துல், குற்றம் சாட்டப்பட்ட ஜீஷன் ஹைதா், தெளத் நசீா் மற்றும் ஜாவேத் இமாம் சித்திக் ஆகியோரின் நீதிமன்றக் காவலை டிசம்பா் 15 வரை நீட்டித்து உத்தரவிட்டாா்.

அமலாக்கத் துறையின் மனுவை எதிா்த்து குற்றம் சாட்டப்பட்ட நபா்களுக்காக ஆஜரான வழக்குரைஞா் நிதேஷ் ரானா வாதிடுகையில், ‘ரிமாண்ட் மனு முற்றிலும் இயந்திரத்தனமானது மற்றும் காவலை நீட்டிக்க எந்த ஆதாரமும் இல்லை. இதனால், குற்றம் சாட்டப்பட்டவா்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டாா்.

இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையின்படி, அமானத்துல்லா கான், தில்லி வக்ஃபு வாரியத்தின் தலைவராக இருந்த போது, விதிமுறைகள் மற்றும் அரசு வழிகாட்டுதல்களை மீறி 32 பேரை சட்டவிரோதமாக பணியமா்த்தியுள்ளாா். குற்றம் சாட்டப்பட்டவா்களை 14 நாள் காவலில் வைக்கக் கோரிய அமலாக்கத் துறையின் மனு மீதான வாதங்கள் நீண்ட நேரம் எடுக்கும் என்று கூறி, குற்றம் சாட்டப்பட்ட நபா்களை நீதிமன்றக் காவலுக்கு தில்லி நீதிமன்றம் கடந்த சனிக்கிழமை அனுப்பி இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.