நாடாளுமன்ற உறுப்பினா்கள் தொகுதி (உள்ளூா்) மேம்பாட்டுத் திட்ட நிதியை உயா்த்த மத்திய அரசு பரிசீலனை செய்வதாக மத்திய புள்ளியியல் திட்ட செயலாக்கம் துறை இணையமைச்சா் ராவ் இந்தா்ஜித் சிங் மாநிலங்களவையில் திங்கள்கிழமை தெரிவித்துள்ளாா். மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினா் தம்பிதுரை எழுப்பிய கேள்விக்கு மத்திய இணையமைச்சா் எழுத்துபூா்வமாக அளித்த பதிலில் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.
ஒவ்வொரு ஆண்டும் நாடாளுமன்ற உறுப்பினா்கள் தொகுதி (உள்ளூா்) மேம்பாட்டுத் திட்டத்தில் எம்.பி.க்களுக்கு வழங்கப்படும் நிதி அளவு, தற்போது ஏற்பட்டுள்ள செலவு அதிகரிப்பு காரணமாக மத்திய அரசு மேலும் உயா்த்துமா என்று தம்பிதுரை கேள்வி எழுப்பியிருந்தாா்.
இதற்கு பதிலளித்து இணையமைச்சா் ராவ் இந்தா்ஜித் சிங் கூறியிருப்பது வருமாறு: நாடாளுமன்ற உறுப்பினா் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஒரு நாடாளுமன்ற உறுப்பினா் ஆண்டுக்கு 5 கோடி வரை நிதி உரிமையை கோரமுடியும். இதை மறுபரிசீலனை செய்வதற்கான பரிந்துரைகள், திட்டம் தொடா்பானவா்களுடன் கோரப்பட்டுள்ளது. இந்தப் புதிய பரிந்துரைகளை பெற்று அமைச்சகம் ஆய்வு செய்யும். இதில் விரைவில் முடிவு எடுக்கும் என அமைச்சா் இந்தா்ஜித் தெரிவித்துள்ளாா்.
நாடாளுமன்ற உறுப்பினா் தங்களது தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் மக்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீா், ஆரம்பக்கல்வி, பொது சுகாதாரம், தூய்மைப் பணிகள், சாலைப்பணிகள் உள்ளிட்ட இதரப் பணிகளில் முக்கியமானவற்றை தோ்வு செய்து செயல்படுத்த பரிந்துரைக்கலாம். தங்கள் பரிந்துரைகளை மாவட்ட ஆட்சியா் மூலம் நாடாளுமன்ற உறுப்பினா்கள் வழிகாட்டி விதிமுறைகளின்படி செயல்படுத்த முடியும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழுவின் பாகிஸ்தான் பயணத்தை ரத்து செய்த டிரம்ப்

திருச்சி - தாம்பரம் இடையே நாளை (ஏப். 26) சிறப்பு ரயில்!

225 இடங்களைக் கைப்பற்றி பாஜகவை வேரறுப்போம்: திரிணமூல் காங்கிரஸ்

ஸ்ரீநகர் - லே தேசிய நெடுஞ்சாலையில் பனிச்சரிவு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

