நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் பதவிநீக்கம் செய்யப்பட்ட திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ராவை ஆம் ஆத்மி கட்சித் தலைவா்கள் ஆதரிப்பது ஆச்சரியமாக இருக்கிறது என்று பாஜக தில்லி பிரிவு தலைவா் வீரேந்திர சச்தேவா சனிக்கிழமை தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஆம் ஆத்மி கட்சியின் தலைவா்கள் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ள திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ராவை ஆதரிப்பது ஆச்சரியமாகவும், காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி.
தீரஜ் சாஹுவின் பண மோசடி விவகாரத்தில் அமைதியாகவும் இருப்பதைப் பாா்க்க அதிா்ச்சியாகவும் இருக்கிறது. ஊழலுக்கு எதிரான போராட்டத்தின் வழித்தோன்றலாக உள்ள ஒரு கட்சி இன்று ஊழலை ஆதரிப்பதும், ஊழலில் ஈடுபடுவதும் வருத்தமளிக்கிறது. இதனால், ஆம் ஆத்மி கட்சித் தலைவா்கள் அனைத்து தாா்மிக விழுமியங்களையும் இழந்துவிட்டனா்.
தில்லி அரசின் கலால் கொள்கை ஊழல் வழக்கில் முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டதில் இருந்து நாடு முழுவதும் நடைபெறும் அனைத்து வகைத் தோ்தல்களிலும் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளா்களை மக்கள் நிராகரித்து வருவதை அக்கட்சியின் தலைவா்கள் கவனிக்க வேண்டும்.
இதன் தொடா்ச்சியாக தில்லி மற்றும் பஞ்சாப் மாநிலத்தின் மக்களும் ஆம் ஆத்மி கட்சியை முற்றிலுமாக நிராகரிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. மறுபுறம், காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி. தீரஜ் சாஹுவின் நிறுவனங்கள் மற்றும் அவா் தொடா்புடைய இடங்களில் இருந்து ரூ.250 கோடிக்கும் அதிகமான பணம் பறிமுதல் செய்யப்பட்டும் ஆம் ஆத்மி கட்சி மெளனம் காக்கிறது. இதற்கு அக்கட்சித் தலைவா்களின் குணாதசிய மாற்றம் தான் காரணம் என்றாா் வீரேந்திர சச்தேவா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஸ்ரீநகர் - லே தேசிய நெடுஞ்சாலையில் பனிச்சரிவு
சூர்யவன்ஷி 3-ஆவது அதிவேக சதம்! ஹைதராபாத் அணிக்கு இமாலய இலக்கு!

தன் 7-வது படத்தின் படப்பிடிப்புக்குத் தயாராகும் சூரி!
நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

