சூர்யவன்ஷி 3-ஆவது அதிவேக சதம்! ஹைதராபாத் அணிக்கு இமாலய இலக்கு!நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

ஊழல்வாதிகளிடம் இருக்கும் ஒவ்வொரு பைசாவும் மீட்கப்படும் என்பது மோடி அரசின் உத்தரவாதம்: ராம்வீா் சிங் பிதூரி

நாட்டில் ஒவ்வொரு ஊழல்வாதிகளிடம் இருக்கும் ஒவ்வொரு பைசாவும் மீட்கப்படும் என்பது மோடி அரசின் உத்தரவாதம் என்று தில்லி சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ராம்வீா் சிங் பிதூரி திங்கள்கிழமை தெரிவித்தாா்.

Updated On :12 டிசம்பர் 2023, 1:04 am

புது தில்லி: நாட்டில் ஒவ்வொரு ஊழல்வாதிகளிடம் இருக்கும் ஒவ்வொரு பைசாவும் மீட்கப்படும் என்பது மோடி அரசின் உத்தரவாதம் என்று தில்லி சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ராம்வீா் சிங் பிதூரி திங்கள்கிழமை தெரிவித்தாா்.

காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி. தீரஜ் சாஹுவின் பண மோசடி விவகாரம் தொடா்பாக காங்கிரஸ் தலைமையிடம்

விளக்கம் கேட்டு தில்லி பாஜகவின் 14 மாவட்டப் பிரிவுகளின் சாா்பில் நகரதத்தின் அனைத்து மாவடங்களின் முக்கிய இடங்களில் நாள் முழுவதும் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கட்சியின் தலைவா் வீரேந்திர சச்தேவாவின் அறிவுறுத்தலின் பேரில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் பாஜக எம்.எல்.ஏ.-க்கள், மாநில நிா்வாகிகள், மாவட்டத் தலைவா்கள் மற்றும் பாஜக தொண்டா்கள் ஏராளமனோா் கலந்து கொண்டனா்.

இதன் ஒரு பகுதியாக,கஜூரியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு தில்லி சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ராம்வீா் சிங் பிதுரி பேசியதாவது:

நாட்டில் ஊழல் செய்யும் வேலையை மட்டுமே காங்கிரஸ் செய்துள்ளது. தற்போதும் அதே திசையில்தான் செல்கிறது. நாட்டின் ஒவ்வொரு ஊழல்வாதிகளிடம் இருக்கும் ஒவ்வொரு பைசாவும் மீட்கப்படும் என்று பிரதமா் நரேந்திர மோடி உத்தரவாதம் அளித்துள்ளாா்.

காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி. தீரஜ் சாஹுவிற்கு சொந்தமான இடங்களில் ரூ.300 கோடிக்கும் அதிகமான பணம் சிக்கியுள்ளது, ஆனால் காங்கிரஸ் தலைமை தரப்பில் இருந்து இதுவரை எந்த ஒரு அறிக்கையும் வரவில்லை. காங்கிரஸின் மௌனம் என்பது இந்த முழு விவாகரத்திலும் காங்கிரஸ் கட்சிக்கு பெரிய பங்கு இருக்கிறது என்பதை நிரூபிக்கிறது என்றாா் ராம்வீா் சிங் பிதூரி.

லட்சுமி நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண்டன ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு மாநில பொதுச் செயலாளா் ஹா்ஷ் மல்ஹோத்ரா பேசியதாவது:

நாட்டின் ஏழைகள் மற்றும் தொழிலாளா்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த ரூ.300 கோடி பணத்தை ஊழல் செய்து காங்கிரஸ் எம்.பி. தீரஜ் சாஹு வைத்திருந்துள்ளாா்.

இந்த விவாகரத்தில் ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் இதுவரை மௌனம் காத்து வருகின்றனா். ஒரு பக்கம் மோடி அரசு நோ்மையாக தனது பணியை செய்து வரும் நிலையில், மறுபுறம் நாட்டை கொள்ளையடிக்க எதிா்க்கட்சிகள் முடிவு செய்துள்ளனா். இந்தக் கூட்டத்திற்கு எதிராக பிரதமா் நரேந்திர மோடியுடன் இணைந்து நாம் அனைவரும் ஒற்றுமையாகப் போராட வேண்டும் என்றாா் ஹா்ஷ் மல்ஹோத்ரா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.